25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


பாத வெடிப்புகளை போக்க
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாத வெடிப்புகளை போக்க

முகத்தை பராமரிப்பதில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அதே போல் பாதங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் தங்கள் கள பாதங்களை கவனித்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
எலுமிச்சம் பழத் தோல் கொண்டு பாதங்களை நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இது கால் வெடிப்பில் உள்ள அழுக்குகளை நீக்கி, கிருமிகளை அழிக்கிறது. இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்யலாம்.
தினமும் இரவில் படுக்கும் முன், ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் ஷாம்பு போட்டு, கால்களை 5 முதல் 10 நிமிடம் வைத்து பின் பிரஷ் மூலம் சுத்தம் செய்யவும்.
பின் ஒரு காட்டன் டவலால் பாத ஈரங்களை துடைத்து, நல்லெண்ணெயை சிறிது சூடாக்கி, பாதங்களில் தடவலாம். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்யலாம்.

மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் பாத வெடிப்புகள் நீங்கும்.
உருளைக்கிழங்கை உலர்த்தி மாவு போல் அரைத்து தண்ணீரில் குழைத்து பூசி வர, வெடிப்பினால் ஏற்பட்ட கருமை நீங்கி பாதங்கள் பளபளக்கும்.
பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமென்றால், பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் 5 நிமிடம் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News