25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கால் ஆணி பிரச்சனைக்கு...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கால் ஆணி பிரச்சனைக்கு...

கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக்கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டு விட்டு காலையில் எடுத்துவிடலாம்.

வேப்பிலை இலை பசை, குப்பைமேனி இலை பசையுடன் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கலந்து கால் ஆணி, உள்ளங்கை தடித்திருந்தால் அந்த  இடத்தில் இந்த பசையை வைத்து துணியால் இரவு முழுவதும் கட்டி வைத்தால் கால் ஆணி பிரச்சனை சரியாகும். 

 5 கிராம் மஞ்சள், 5 கிராம்  வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கால் ஆணி உள்ள இடத்தில் அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு  வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்யவதால், கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து  விடும்.

கடுகை பயன்படுத்தி கால் ஆணியை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் வறுத்து பொடி செய்த கடுகு, மஞ்சள் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி எடுத்து வைக்கவும். இரவு நேரத்தில் தூங்க போகும் முன்பு கால்களை  சுத்தப்படுத்தி இந்த தைலத்தை தடவினால், கால் ஆணி குணமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News