முகம் டக்குன்னு பளிச்சிட தர்பூசணி
இந்த வெயிலுக்கு ஏற்ற தர்பூசணி பழத்தை சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும். தர்பூசணி பழமானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல், முக அழகிற்கும் உதவியாக இருக்க கூடியது.
ஒரு பீஸ் தர்ப்பூசணி எடுத்து அதன் சதையை மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும், இதிலிருந்து வரும் சாற்றை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாற்றுடன் பயத்த மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்வதால் முகம் பொலிவு பெறும்.
தர்ப்பூசணி சாறு மற்றும் சிறிதளவு தேன், தயிர் போன்றவற்றை மிக்சியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து அதன் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.
0
Leave a Reply