ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்க.....
பால் லேசாகத்திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல்சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றவும். கெட்டித்தயிராகி விடும்.
குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறை ஊற்றி மூடி வைத்து விட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்து விடும்.
பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவைக்காமல், நன்கு ஆறிய சர்க்கரைப்பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.
தேன்குழல், சீடை ஆகியவற்றைச்செய்யும் போது மாவை வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.
வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.
0
Leave a Reply