25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 09, 2026

1 லட்சம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறதா Volkswagen?

Audi, Porsche, Skoda, Lamborghini உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளைக் கொண்ட முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான Volkswagen, சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டி, மின்சார வாகனங்களுக்கான மந்தமான தேவை மற்றும் அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் உள்ளிட்ட காரணங்களால் சவால்களை எதிர்கொண்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் உலகளவில் சுமார்1 லட்சம் பணியிடங்களைக் குறைக்கும் திட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது வாகனத் துறையில் மின்சார வாகன மாற்றம், உற்பத்திச் செலவு மற்றும் உலகளாவிய போட்டி ஆகியவை ஏற்படுத்தி வரும் மிகப்பெரிய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.

Sep 09, 2026

இந்தியன் வங்கி துபாயில் புதிய அலுவலகம் திறக்க திட்டம்!

சர்வதேச அளவில் தனது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், துபாயில் புதிய பிரதிநிதித்துவ அலுவலகத்தை திறக்க இந்தியன் வங்கி திட்டமிட்டுள்ளது.துபாயில் அதிக அளவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் மக்கள் தொகையில் சுமார் 33 சதவீதம் பேர் இந்தியர்கள் என இந்தியன் வங்கியின் தலைமை செயல் அதிகாரி பினோத் குமார் தெரிவித்துள்ளார்.இந்த புதிய அலுவலகம் மூலம் துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கும், சர்வதேச வாடிக்கையாளர்களுக்கும் வங்கியின் சேவைகளை மேலும் எளிதாக வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sep 08, 2026

அதிக உப்பு, சர்க்கரை, கொழுப்பு உள்ள உணவுகளுக்கு இனி ‘ரெட் வார்னிங் லேபிள்’? உச்சநீதிமன்றத்தின் கவனம் – FSSAI-யின் புதிய முன்மொழிவு!

நுகர்வோர் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் முன்பக்கத்தில் Front-of-Pack Warning Label எனப்படும் எச்சரிக்கை லேபிள்களை அறிமுகப்படுத்துவது குறித்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அதிக அளவு சர்க்கரை, உப்பு அல்லது நிறைவுற்ற கொழுப்பு கொண்ட உணவுகள் மற்றும் சில பானங்களின் முன்பக்கத்தில், நுகர்வோருக்கு எளிதில் தெரியும் வகையில் சிவப்பு அறுகோண எச்சரிக்கை லேபிள் இடம்பெறலாம். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஊட்டச்சத்துகள் (சர்க்கரை, உப்பு, கொழுப்பு) நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தால் எச்சரிக்கை லேபிள்.ஒரு ஊட்டச்சத்து மட்டும் அதிகமாக இருந்தாலும் எச்சரிக்கை லேபிள் வழங்கும் நடைமுறை பரிசீலிக்கப்படலாம்.அதிகப்படியான சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்வது, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்துடன் தொடர்புடையது.முன்பக்க எச்சரிக்கை லேபிள்கள் மூலம், குறிப்பாக குழந்தைகள் உட்பட அனைத்து நுகர்வோரும் உணவுப் பொருட்களின் ஊட்டச்சத்து தன்மையை விரைவாகப் புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் தேர்வு செய்ய உதவலாம். நீண்ட காலத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம், தனிநபர் மற்றும் சமூக சுகாதாரத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம்.இது தற்போது முன்மொழிவு/பரிசீலனை நிலையில் உள்ள நடவடிக்கை. அடுத்தடுத்த நீதிமன்ற விசாரணைகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்குப் பிறகே இறுதி நிலை தெளிவாகும். நாம் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது! லேபிளைப் பாருங்கள்… நல்ல தேர்வு செய்யுங்கள்!

Sep 08, 2026

வாழ்க்கையைப் புரிந்துகொள்ள சில கசப்பான உண்மைகள்.

வாழ்க்கையில் நாம் எதிர்பார்ப்பது போல எல்லா உறவுகளும் எப்போதும் இருக்காது. காலம், சூழ்நிலை, பணம், பொறுப்பு ஆகியவை உறவுகளின் தன்மையையும் மாற்றக்கூடும்.தேவையும் எதிர்பார்ப்பும் குறைந்தால் சில உறவுகளின் நெருக்கமும் குறையலாம்.குடும்பத்தில் புதிதாக இணையும் ஒருவரை பழைய உறவுகளுடன் ஒப்பிடுவது தேவையற்ற மனக்கசப்பை உருவாக்கும்.வயதான பெற்றோர் பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும் இடத்தை நாடுவது இயல்பானது.நாம் குடும்பத்திற்காக செய்த தியாகங்களை, அவர்கள் எப்போதும் அதே விதத்தில் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.வயது அதிகரிக்கும்போது உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். அதனால் முதுமைக்கான நிதி மற்றும் மருத்துவத் திட்டமிடல் அவசியம்.எல்லா உறவுகளும் ஒரே அளவு நம்பிக்கைக்குரியதாக இருக்காது.நம்மை உண்மையாக ஆதரிக்கும் உறவுகளை அடையாளம் கண்டு மதிப்பது முக்கியம்.உறவுகளை எதிர்பார்ப்பால் அளப்பதை விட, புரிதலுடன் அணுகுவது வாழ்க்கையை எளிதாக்கும்.

Sep 08, 2026

மலை இருவாட்சி – அருணாச்சலத்தின் மாநிலப் பறவை.

வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம், 1987-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் மாநிலப் பறவையாக ‘கிரேட் ஹார்ன்பில்’ எனப்படும் மலை இருவாட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இமயமலையை ஒட்டிய காடுகளில் அதிகம் காணப்படும் இந்தப் பறவைகள், மழைக்காடுகள் மற்றும் ஈரப்பதமான பசுமைக் காடுகளில் வசிக்கின்றன.அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பக்கே புலிகள் காப்பகம், மலை இருவாட்சிகளைப் பார்ப்பதற்கான முக்கியமான இடங்களில் ஒன்றாகும். உடல் நீளம் சுமார் 90 முதல் 130 செ.மீ. வரை இருக்கும்.இறக்கைகளை விரித்த நிலையில் சுமார் 152 செ.மீ. வரை அகலம் இருக்கும்.வால் நீளம் சுமார் 3 அடி வரை வளரக்கூடும்.எடை சுமார் 2.5 முதல் 4 கிலோ வரை இருக்கும்.உடல் பெரும்பாலும் கருப்பு இறகுகளால் மூடப்பட்டிருக்கும்.இறகுகளின் நுனிப்பகுதிகளில் வெள்ளை நிறம் காணப்படும்.பெண் இருவாட்சிகள், ஆண் பறவைகளைவிட சிறியதாக இருக்கும். ஆண் பறவைகளின் கண்கள் சிவப்பு நிறத்திலும், பெண் பறவைகளின் கண்கள் நீலம் அல்லது மஞ்சள் கலந்த நிறத்திலும் காணப்படுகின்றன.மலை இருவாட்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அதன் பெரிய அலகு. அதன் மேற்பகுதியில் காணப்படும் பெரிய அமைப்பு ‘காஸ்க்’ எனப்படுகிறது.கடந்த காலங்களில் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இருவாட்சியின் அலகு மற்றும் அதனுடன் தொடர்புடைய பகுதிகளைப் பயன்படுத்தி சிறிய கலைப்பொருட்கள் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.அருணாச்சலப் பிரதேசத்தின் நைஷி பழங்குடியின மக்களிடமும் இருவாட்சிக்கு பாரம்பரிய முக்கியத்துவம் இருந்துள்ளது. அதன் இறகுகள் உள்ளிட்ட பகுதிகள் பாரம்பரிய தலைக்கவசங்களில் பயன்படுத்தப்பட்டன.வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட இழப்பு உள்ளிட்ட காரணங்களால் இருவாட்சிகளுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது அவற்றைப் பாதுகாப்பதில் பழங்குடியின மக்களும் முக்கிய பங்காற்றி வருகின்றனர்

Sep 07, 2026

வாரமொருமுறை போன் ஆஃப் செய்வது அவசியமா?.

ஸ்மார்ட்போன்களை வாரத்திற்கு ஒருமுறையாவது ஒரு நிமிடம் 'Switch Off' செய்வது பேட்டரியின்ஆயுளை நீட்டிக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். தொடர்ந்துஇயங்குவதால் ஏற்படும் அதிக வெப்பம் மற்றும் 'Hang' ஆகும் சிக்கல்களை இதுதவிர்க்கிறது. மேலும், போனை ரீஸ்டார்ட் செய்வதால் பின்னணியில் இயங்கும்தேவையற்ற தரவுகள் (Cache) அழிக்கப்பட்டு, போனின் வேகம் மற்றும் நெட்வொர்க்செயல்திறன் மேம்படும்.

Sep 07, 2026

இனி WHATSAPP இதில் இயங்காது.

Android 6-க்கும் குறைவான software-களில் இயங்கும் செல்போன்களில் இனி WhatsApp செயலி இயங்காது என மெட்டா நிறுவனம் அறிவிப்புசெப்டம்பர் 8-ம் தேதிக்கு பிறகு Android 6-க்கும் மேலே உள்ள போன்களில் மட்டுமே வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியும் என்பதால், பயனர்கள் Back-up எடுத்துவைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்.

Sep 07, 2026

உங்கள் செல்போனில்  - அவசர எண்கள் .

அவசர நேரங்களில் உதவும் முக்கிய எண்களை உங்கள் மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்: மனித உரிமைகள் ஆணையம் -22410377 போக்குவரத்து அத்துமீறல் புகார் 9383337639 போலீஸ் மீது ஊழல் புகார் (SMS) 9840983832 குழந்தைகள் அவசர உதவி - 1098 முதியோர் அவசர உதவி - 1253 தேசிய நெடுஞ்சாலை அவசர உதவி -  1033 ரத்த வங்கி 1910 கண் வங்கி 1919 விலங்குகள் பாதுகாப்பு - 044-22354989  மக்களுக்கு SHARE பண்ணுங்க.

Sep 07, 2026

நீருக்கு அருகில் நேரம் செலவிடுங்க! மன அழுத்தம் குறையுமாம்.

கடல், ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகள் அருகில் நேரம் செலவிடுவது மன அழுத்தத்தை பெரிதும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அலைகளைப் பார்ப்பது, நீர் ஓசையைக் கேட்பது போன்றவை கார்டிசோலைக் குறைத்து உடலை அமைதியாக்கும். Dr. Wallace J. Nichols-ன் ஆராய்ச்சி, நீர் எவ்வாறு மூளையை அமைதியான மற்றும் தியான நிலைக்கு கொண்டு செல்லும் என்பதை விளக்குகிறது.

Sep 07, 2026

இன்டர்நெட் இல்லாமலே PhonePe மூலம் பணம் அனுப்பலாம்.

இணைய வசதி இல்லாமலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் வகையில் 123Pay வசதியை PhonePe அறிமுகப்படுத்த உள்ளது.2G இணைப்பு உள்ள பகுதிகளிலும் இந்த சேவை செயல்படும் வகையில் Nokia, Lava உள்ளிட்ட நிறுவனங்களுடன் PhonePe ஒப்பந்தம் செய்துள்ளது.கேமரா வசதி கொண்ட ஃபீச்சர் போன்களில் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, 12 மொழிகளில் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட உள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 136 137

AD's



More News