25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையத்தில் 6-வது மைல் நீர்த்தேக்கம் நீர்த்தேக்கம் வறண்டு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையத்தில் 6-வது மைல் நீர்த்தேக்கம் நீர்த்தேக்கம் வறண்டு, குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மலையில் பெய்யும் மழை நீர் அய்யனார் கோவில் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் குழாய் மூலம் 6-வது மைல் குடிநீர் தேக்கத்திற்கு வருகிறது. இந்த நீர் தேக்கத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் சென்று சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ராஜபாளையம் நகராட்சி மூலமாக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில் ஆற்றில் மழை பெய்யாமல் வறண்டு உள்ளது.

பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளை கிணறு மற்றும் போர்வெல் மூலம் தினசரி 50 லட்சம் தண்ணீரை திறந்து நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தண்ணீரின் தேவையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் போதிய அளவு மழை இல்லாததால் இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து பொது மக்களுக்கு சரியாக குடிநீர் வழங்க முடியாத நிலை உள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம்வருகிற தண்ணீரை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்குவழங்குவதற்காக தண்ணீரை திறந்து விடுகின்றனர்.குடிநீரில் மருந்து அதிகம் கலப்பதால் தண்ணீரை பொதுமக்கள் குடிக்க அச் சப்படுகின்றனர். எனவே பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News