சாஸ்தா கோயில் வனப்பகுதியில் ட்ரக்கிங் வாய்ப்புகளை எதிர்பார்த்து சுற்றலா பயணிகள் காத்திருக்கின்றனர். ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய சாஸ்தா கோயில் வனப்பகுதியும் அறிவிப்பில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் அறிவிக்காததால் இதற்கான பரிந்துரைக்கு காத்திருக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏரா ளமான ட்ரக்கிங் மலையேற்ற பகுதிகள் இருந்து வந்த நிலையில் காட்டுத்தீ, வன விலங்குகள் எதிர் கொள்ளுதல், பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக அரசால் முறைப்படுத்தி அறிவிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டத்தில் சாஸ்தா கோயில் வனப்பகுதி ஏற்கனவே தகுந்த பாதுகாப்புடன் கண்காணிப்பின் கீழ் இருந்து வருவதுடன் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு முறையான பாதுகாப்புடன் வனப்பகுதியின் தொடக்கம் முதல் அருவி வரை வாகனத்தில் அழைத்துச் சென்று ஆற்றில் நீராடிய பின் மீண்டும் கொண்டு வந்து விடப்படுகிறது.இதில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உணவு பொருள்கள் கட்டுப்பாடு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் தேவதானத்தில் போதிய வாய்ப்புகள் இருந்தும் சாஸ்தா கோயில் வனப்பகுதியில் சூழல் சுற்றுலா திட்டத்தில் ட்ரக்கிங் அமைக்க வாய்ப்புகள் இருந்தும் விடுபட்டதை அரசுக்கு பரிசீலனை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்துள்ளனர். ராஜபாளையம் முடங்கியார் சாலையில் உள்ள இரட்டைக் குளம் கண்மாய் தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரை செடிகள். ராஜபாளையம்-அய்யனார் கோவில் செல்லும் வழியில் உள்ள முடங்கியார் சாலையில் இரட்டைக்குளம், புளியங்குளம் கண்மாய் உள்ளது. இதில் கண்மாய் தெரியாத அளவிற்கு ஆகாயத்தா வதந்தி மரை அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் கண்மாய்களில் தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. ஆக்கிரமிப்பினால் இந்த கண்மாய்களின் அளவும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் ஆற்றுப்பகுதி வழியாக இந்த கண் மாய்க்கு நீர் வந்து சேரும். தற்போது இந்த கண்மாய் பராமரிப்பு செய்யப்படாத தால் கண்மாய்க்கு நீர்வரத்து வழிகள் அடைபட்டு மழைநீர் செல்ல வழியின்றி காணப்படுகிறது. எனவே கண்மாயில் ஆக்கிரமித்து வளர்ந்து வரும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றவும், கண்மாயில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பு நிரந்தர தீர்வு காண கோரிக்கை. ராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி கூட் டுக் குடிநீர் திட்டம் மூலம் புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் ஏற்றி சப்ளைக்கான கடைசி கட்ட பணிகள் நடந்து வருகிறது.இதில் அழுத்தம் தாங்காமல் பல்வேறு இடங்களில் பகிர்மான குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.ஒரு சில இடங்களில் உடைப்பு சரி செய்யப்பட்டும் பல இடங்களில் குடிநீர் வாறுகால்களில் கலந்து வீணாவதுடன் அந்தந்த பகுதி ரோடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.தொடரும் இப்பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அய்யனார்கோயில் ஆற்றின் நீர்வரத்து பெறும் முதல் கண்மாயாக முடங்கியாறு ரோட்டின் அருகே புதுக்குளம் கண்மாய் அமைந்துள்ளது.சுமார் 200 ஏக்கர் பாசன வசதி உள்ள இக்கண்மாய் நிறைந்து பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டநேரி உள்ளிட்ட நகரை ஓட்டிய கண்மாய்களும் தொடர்ச்சியாக நீர்வரத்து பெற்று வருகின்றன.இந்நிலையில் கண்மாய் கரை வழியாக இரண்டு கிலோமீட்டர்தூரம் உள்ள விளை நிலங்களுக்கு செல்லும் பாதை முறையாக வசதி செய்யப்பட வில்லை. கரடு முரடாகவும் உரம், விளை பொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்ல டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. அகலம் குறைவாகஉள்ளதால் ,மழைக்காலங்களில் சகதியில் சிக்கி விவசாயிகள் சிரமத்திற்கு உள் ளாகின்றனர்.இதுவரை பாதையை சீரமைத்து தரவில்லை. விவசாயிகள் தேவை கருதி தார் சாலை அமைத்து தர விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நகரின் நடுவே அமைந்துள்ளது சஞ்சீவி மலை. மழைக் காலங்களில் இதில் உருவாகும் நீர்வரத்து ஓடைகள் வழியே நகரின் பல்வேறு ஊருணிகளை நிரப்பி அருகருகே உள்ள கண்மாய்களுக்கு சென்று சேரும் வகையில் நீர்வரத்து உள்ளது.இந்நிலையில் மலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பெரியாதிகுளம் கண்மாய்க்கு செல்லும் ஓடை அம்பலபுளி பஜார் குடியிருப்புகள் வழியே சென்று சேர்கிறது.10 ஆண்டுகளுக்கும் மேல் பிரதான நீர் ஓடைசிறிதுசிறிதாகஆக்கிரமிப்பிற்குள்ளானதுடன் முறையாக துார்வாரும் பணி நடைபெறவில்லை.இதனால் ஓடை முழுவதும் மண் மேவி புதர்களாக வளர்ந்து நீர்வரத்திற்கு தடை ஏற்படுத்தி வருகிறது. தொடர் மழையால் கண்மாய்கள் நீர்வரத்து அதிகரித்துள்ளன. இந்நிலையில் ராஜபாளையம் கடம்பன் குளம் கண்மாய் பிரதான ஷட்டர்களுடன் பாதுகாப்புக்கான உபரி நீர் வெளியேறும் ஷட்டர்கள் சேதமாகி வீணாகி வெளியேறுகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் இரண்டு வாரங்களுக்கு கூட தாங்காது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.கோடை வரை காத்திருக்க கூறுகின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள். ஒவ்வொரு வருடமும் இதே நிலை நீடிக்கிறது. ஓடைமுறையாகதுார்வாரவும், சேதமான ஷட்டர்களை சரிசெய்யவும், அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்து உள்ளனர்.
ராஜபாளையம் நகர்பகுதியில் டெங்கு பாதிப்பை அடுத்து கழிவு நீர் தேக்கத் திற்கு தீர்வு காண்பதற்காக நகரின் நடுவே செல்லும் நெடுஞ்சாலையை கழிவு நீர் கடப்பதற்காக கிழக்கு பகுதியில் இருந்து நான்கு இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது.அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே உள்ள சாக்கடை தரைப்பாலம் 8 அடி ஆழத்தில் 6 அடி அகலம் தொட்டி போன்ற அமைப்புடன் உள்ளதால் பிளாஸ் டிக் உள்ளிட்ட கழிவுகள் இதில் குவியலாக தேங்கி நிற்கிறது.மலையடிப்பட்டி குடி யிருப்புகள், வணிக நிறு வனங்கள், சிறு தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி வெளியேற முடியாமல் இருப்பதால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லை, துர்நாற்றம் உள்ளிட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது.நீண்ட வருடங்களாக இருந்து வரும் இப் பிரச் சனைக்கு நெடுஞ்சாலை துறையினர், மருத்துவத் துறையினர் இணைந்து முறையான தீர்வு காண வேண்டும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
ராஜபாளையத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை சார்பில் தாலுகா அலுவலகம் அருகே புளியங்குளம் கண்மாய் கரையை ஒட்டி ரூ.3.41 கோடி செலவில் புதிய கட்டடப்பணி கடந்த ஆண்டு தொடங்கியது லேசானமழைக்கேதண்ணீர்தேங்கி நிற்கும் இப்பகுதியில் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் விழா நடைபெற்றது. சென்னையிலிருந்து காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்துள்ளார்.கட்டடத்துக்கான பாதுகாப்பு சுவர் கட்டி முடிக்கப்படாமலும் அலு வலகத்தின் பின்பகுதி சுவர்களுக்கான எந்த பணியும் தொடங்காமல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.ஊராட்சி ஒன்றிய தலைவருக்கும், தங்கபாண்டியன், தி.மு.க., எம்.எல்.ஏ.க்கும், , ஊராட்சி ஒன்றிய தலைவருக்குமான உட்பூசலால் தங்கபாண்டியன்,திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை.முழுவதும் பணிகள் நிறைவடையாமல் திறந்து உள்ளது குறித்து ,பொதுமக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ராஜபாளையம்,சமுசிகப்புரம் கண்மாய் நேரடியாககழிவுநீர் நீர்நிலைகளில் கலக்கவிடப்படுவது தான் எழுதப்படாத விதியாகஉள்ளது. கழிவு கலக்கும் நீர்நிலைகளால் மண்வளம், நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் உள்ளூர் நீராதாரத்தையும், மழைநீர் சேகரிப்பையும் கேள்விக்குறியாக்கும் ஆபத்து உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வ.உ.சிமெயின் தெருவில் இருந்து ராக்காச்சி அம்மன் கடைசி பகுதி வரை சிறு குறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இங்கு அதிக வாகனங்கள் சென்று வரும்போது ரோட்டை ஒட்டி உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து அச்சம் இருந்து வருகிறது.பல நேரங்களில் நாய், பூனை இதில் விழுந்து துர்நாற்றம், சுகாதார கேடு ஏற்படுவதால் தடுப்பு அமைக்க வேண்டும். குடியிருப்பு நடுவே செல்லும் வாறுகால் போதிய அகலமில்லாமல் மழைக்காலங்களில் கழிவுகள் தெருக்களில் வெளி யேறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பை குவிவதை முறையாக அகற்றுவது இல்லை. குப்பை தேக்கம் ஏற்பட்டு அகற்ற வழி இன்றி எரித்து வருகின்றனர். எஸ்.ராமலிங்காபுரம் மெயின் ரோடு நுழைவு பகுதி தரைப்பாலம் நடுவே கம்பி பெயர்ந்து வாகனங்கள் நுழைவதற்கு திணறுகின்றன.மகளிருக்கான சுகாதார வளாகம் இல்லை. குடியிருப்புகளுக்கு' மின்விளக்கு, தெரு வசதி என அடிப்படை வசதிகளை எதிர் பார்த்துள்ளனர்.
280 ஏக்கர் பாசன பரப்புடன் அய்யனார் கோவில் ஆற்று நீர் நேரடியாக ஒரு பங்கும், கிருஷ்ணாப்பேரி கண்மாய் உபரி நீர் கண்மாய்க்கானநீர்வரத்துஆதாரமாக தென்காசிமெயின்ரோட்டில்அலப்பச்சேரிகண்மாய்உள்ளதுநெல்,வாழை,கரும்புஉள்ளிட்டசாகுபடிபயிர்கள்அதிகம்விளைவிக்கப்படுகிறது. மேற்கு, கிழக்கு,நடு என மொத்தம் மூன்று பாசன மதகுகள் உள்ள நிலையில் கிழக்கில் உள்ள மதகு திறக்க முடிவதில்லை.கண்மாய்க்குள் சீமை கருவேல மரங்கள் புதர்களாக வளர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன. இதனால் தண்ணீர் இருப்பு வேகமாக ஆவியாகி கோடை காலங்களில் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேறி வெங்காநல்லுார் செல்லும் 25 அடி அகல ஓடையும் ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டது. இதில் விவசாய விளைப் "பொருட்களை கொண்டு சென்று வந்த நிலையில் தற்போது மாட்டு வண்டி மட்டும் செல்லும்படியாக மாறிவிட்டது.விவசாய தேவைக்கு என ஒதுக்கப்பட்ட கண்மாய் மண்ணை இந்த ஆண்டு பல்வேறு வணிக தேவைகளுக்காக அரசு, தனியார் அள்ளிச் சென்றதால் கண்மாய் உள்பகுதி சிறிய தெப்பமாக குழிகளுடன் காணப்படுகிறது. நகராட்சி அடுத்த பகுதியில் உள்ளதால் குடியிருப்பின் கட்டட கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டும் இடமாக தென்காசி மெயின் ரோட்டில் உள்ள நீர் வரத்து ஓடையை மாற்றியுள்ளனர்.
ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் புதிதாக இரண்டாவது நுழைவு பாதை, ஏற்கனவே உள்ள பாதையை விரிவுப்படுத்துதல், மாற்று திறனாளிகளுக்கான சுகாதார வளாகம், முதல் வகுப்பு காத்திருப்பு அறை, கூடுதல் கட்டடம், கண்கா ணிப்பு கேமரா, வாகன காப்பகம், லிப்ட், இரண்டாவது நடை மேம்பாலம், பயணிகள் உள் நுழைந்துவெளியே செல்வதற்கான தனி தனி வசதி என ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.11.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேல் நடந்து வருவதுடன் பாதுகாப்பு கருதி ஏற்கனவே இருந்த பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. வருவாய் அடிப்படையில் ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் என். எஸ்.ஜி 5 தரவரிசையில் இருந்து என்.எஸ்.ஜி 4 என்ற தரவரிசைக்கு முன்னேறி உள்ளது. ஓராண்டுக்கு மேல் நடக்கும் கட்டுமான பணி காரணமாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மதுரை, விருதுநகர், தென்காசி - மாவட்டத்தின் முக்கிய நகரங்களான திருமங்கலம், கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சேத்துார், சிவகிரி, வாசுதேவநல்லுார், புளியங்குடி, கடையநல்லுார், தென்காசி, செங்கோட்டை நகரங்களின் மையப்பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகிறது.முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரையுள்ள 71.6 கிலோ மீட்டர் துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கிருஷ்ணன்கோவில் அருகே டோல்கேட் அமைகிறது.2025 ஜூன் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இராஜபாளையத்தில் இரவு நேரங்களில் பராமரிப்பின்றி ரோட்டில் திரியும் மாடுகள், நாய்கள் அதிகரித்து விட்டன. சாலை ஒரங்களிலும் நடுவிலும் ஒய்வெடுப்பதுடன் திடீரென கடக்கும் போது வாகனஒட்டிகள் மோதி காயம் அடைவதுடன் கால்நடைகளும் இறப்பை சந்திக்கின்றன. நாய்களை கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் ரோடுகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.