தோப்பிற்குள் புகும் யானை கூட்டங்கள் வாழை, தென்னை மரங்களை ஒடித்து சேதப்படுத்தியது.
ராக்காச்சிஅம்மன்கோயில் பாதையில்,ராஜபாளையம் மேற்குதொடர்ச்சிமலைஅடிவாரம் ,ஓடைக்காடுபகுதியில் தென்னை மரங்களும், ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்களை கடந்த ஒரு வருடத்திற்கும்அதிகமாக முருகன் குத்தகை எடுத்து 20 ஏக்கர் விவசாயம் செய்து பராமரித்து வந்தார்
இரவுநேரத்தில் தோப்பிற்குள் புகும் யானை கூட்டம் வாழை மரங்களை ஒடித்துசேதப்படுத்தியதுடன், தென்னை மரங்களையும் கடந்த சில நாட்களாக சாய்த்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
ஒரு சில நாட்களில் பயன் தரக்கூடிய வாழை மரங்கள் முழு வதும் யானை கூட்டம் புகுந்து சேதம் ஏற்படுத்தியதால் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள் ளது. வனத்துறையினர், வருவாய்த் துறையினர் இழப்பீடை அரசுக்கு பரிந்துரை செய்து பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவிவசாயி முருகன் எதிர்பார்த்துள்ளார் .
0
Leave a Reply