25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மக்களின் எதிர்பார்ப்பு

Sep 23, 2024

செப்டிக் டேங்க் கிளினர் லாரிகள், வேன்கள், நிறத்துமிடமாக மாறிய இராஜபாளையம் காமராஜ் நகர்

இராஜபாளையத்தில் காமராஜ் நகர், இரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ளது. இந்த ஏரியாவில் நிறைய உணவு விடுதிகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள், அமைந்துள்ளன. ஹாஸ்பிடல் ரோடு என்ற ஏரியாவில் செப்டிக் டேங்க் கிளினர் லாரிகள் வேன்கள், இங்கு வரிசையாக நிறுத்துகின்றனர். வீடுகள் லாட்ஜ்கள், பள்ளிகள், உணவு விடுதிகள் இருக்கும் இடத்தில் “ பார்க் செய்வது தவறு  ”என எடுத்துச்சொல்லியும் கேட்பதாக இல்லை.சுகாதாரம் இங்கு பெரிய கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. “உங்க ரோடா ” “இது பப்ளிக் ரோடு யாருவேண்டுமானாலும் நிறுத்தலாம். ”என்று தைரியமாகக் கூறுகின்றனர். முனிசிபலில் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்க வில்லை, பள்ளியிலிருந்து வெளிவரும் குழந்தைகள் இதைத் தாண்டி, எதிர் வரும் வண்டியைத் தாண்டிச் செல்கின்றனர். நடைபாதையை ஆக்கிரமித்து நிற்கும் இந்த வண்டிகளை, யார் சொன்னால்  வேறு இடத்தில் நிறுத்துவார்கள் என்று தெரியாமல் காமராஜர் நகர் வாழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sep 22, 2024

இராஜபாளையம் நகரின் நீரின் வேதித்தின்மை அதிகரிப்பால் விவசாயிகள் வேதனை

இராஜபாளையம் சேத்தூர் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீர் ஆதார பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பு உள்ள விவசாய நிலங்களில் சாகுபடி நடந்து வருகின்றன. கிணறு ஆழ்துளை கிணறு அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீர் மூலம் தென்னை, வாழை காய்கறி பயிர்களும், நீர் குறைந்த பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றுக்கு ஆழ்துளை கிணற்று நீர் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.முன்பு கண்மாய் பாசன நீர் மூலம் பெறும் விவசாயம் நல்ல மகசூலை பெற்று வந்த நிலையில் நீரின் தன்மை உவர்ப்பாக மாறியதுடன் ஆழ்துளை கிணற்று நீரின் வேதித்தன்மை, அதிகரித்துள்ளதால் சாகுபடி குறைவும் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.இதற்கு காரணம் நகரின் சாக்கடை, கழிவு நீர் தேங்கும் பகுதியாக கண்மாயை மாற்றியதே ஆகும். பல்வேறு பகுதிகளும் இதே நிலை காணப்படுவதால் நீர் நிலைகளை ஒட்டிய விவசாயமும் பாதிப்பு ஏற்படுகிறது. மண்ணின் தன்மையை ஆய்வு செய்து பிரச்சனைகளை போக்க அரசு துறைகள் முன் வரவேண்டும் என்ற விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.  

Sep 22, 2024

சங்கரன்கோவில் முக்கிலிருந்து புது பஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு வரை  தடுப்பு சுவர் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

இராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கிலிருந்து புது பஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு உள்ளது. இதனை ஒட்டி 20 அடி அகலம் 10 அடி ஆழம் கொண்ட மழை நீர் கால்வாய் புது பஸ்டாண்ட் எதிரே உள்ள புதியாதிகுளம் கண்மாயில் கலக்கும் விதமாக அமைந்துள்ளது. Iசங்கரன்கோவில் முக்கில் தொடங்கி சிங்கத்திருளப்ப சுவாமி கோவில் வரை, பெரும் பகுதி இடங்களில் தடுப்புச் சுவர் இல்லாததால் ரோட்டில் இருந்து ஒதுங்கும்போது, கால்வாயில் விழுந்து காயம் அடைவது தொடர்கதை ஆகிறது. இரவு நேரங்களில் சாலையை ஒட்டி உள்ள கால்வாய் இருப்பதை வாகன ஒட்டிகள் அருகில் வந்தால் மட்டுமே காண முடியும். இதுவரை  பல உயிர் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பு கம்பி அல்லது தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sep 09, 2024

ஆதார் சேவைக்கு அலையும் இராஜபாளயம் நகர மக்கள்.

ஆதார் சேவைக்காக நிரந்தர சேர்க்கை, மையங்கள் மாநகராட்சி, நகராட்சி, தாலுகா, அலுவலகங்களில் எல்காட் மூலம் சேவை வழங்கி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் ஆதார் உடன் பான்கார்டு இணைப்பு உள்ளிட்டவற்றிற்கு கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில் பான்கார்டு பெயர் ஒற்றுமைக்காக ,ஆதாரில் திருத்தம் உள்ளிட்ட பணிகள் அவசியமாகிறது. இது தவிர பள்ளி மாணவர்கள், மத்திய மாநில அரசுகளின் சலுகை திட்டங்களை பெறுவோர், அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் ,இராஜபாளையத்தில் செயல்படும் நிரந்தர ஆதார் சேவை மையங்களில் தினமும் கூட்டம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கிராமப்பகுதியில் இருந்து திருத்தத்திற்காக வந்து செல்வோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் வருவோருக்கு முறையாக டோக்கன் வழங்கி சேவைகள் வழங்குவது இல்லை. இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டு வருகிறது. சேவை மையம் திறப்பு அடைக்கப்படும் நேரம் குறித்த குறிப்பு ,பொதுமக்களின் பார்வையில் படும்படியும். விடுமுறை காலங்களை முறையாக அறிவிப்பு எழுதி வைக்க வேண்டும். மாணவர்களுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அந்தந்த பகுதியில் சிறப்பு ஆதார் முகாம்கள் ஏற்படுத்தி கூட்டத்தை குறைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.விவசாயிகள் போர்வையில் மண் கடத்தல்--விவசாயிகள்,மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக என்ற பெயரில், மாவட்ட நிர்வாகம் கண்மாய் வண்டல் மண் அள்ளுவதற்கு அனுமதி அளித்ததை, ரியல் எஸ்டேட் துறையினரும், செங்கல் சூளை அதிபர்கள் மும்முரமாக பயன்படுத்தி வருகின்றனர். சுற்று வட்டார கண்மாய்களில் மண் அள்ளுவதற்கான விதிமுறைகளை மீறி கண்மாய் கரைகளை உடைத்து பாதை ஏற்படுத்தி கரைகளை ஒட்டியும், மடைகளில் தண்ணீர் வெளியேற வழி இன்றியும் அதிக ஆழத்திற்கு மண் அள்ளுகின்றனர். இயந்திரம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் தொடர் மணல் கொள்ளை நடந்து வருகிறது.விவசாயத்திற்கு ஆதாரமான கண்மாயின் உள்பகுதியில் சிறு சிறு தெப்பங்களாக மாற்றும், இவர்களின் செயல் எல்லை மீறி போவது குறித்து யார் நடவடிக்கை எடுப்பது? என்ற விரக்தியில் விவசாய சங்கங்களும் தவித்து வருகின்றனர்.

Aug 27, 2024

இராஜபாளையத்தில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வைக்கும் பிளக்ஸ் போர்டுகள்.

இராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா அருகே அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை செயல்படுகிறது. நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலை ஒட்டி உள்ள மருத்துவ மனையை மறைத்து அரசியல் கட்சியினர் பிளக்ஸ் விளம்பர போர்டு வைக்க தொடங்கினர். தனியார் அமைப்பு மூலம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தடை உத்தரவு பெற்ற இது குறித்து எச்சரிக்கை போடு நுழைவாயில் அருகே வைக்கப்பட்டது.உயர்நீதிமன்ற உத்தரவை மீறி வைக்கப்படும் பிளக்ஸ் போர்டுகளினால் விபத்துக்கள் ஏற்படவாய்ப்புள்ளது. போலீஸ் நகராட்சி அதிகாரிகள் நீதிமன்ற உத்தவை மதித்து மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Aug 25, 2024

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி வளைவில் ஏற்பட்டுள்ள பள்ளம் சரி செய்ய வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

ராஜபாளையம் சங்கரன்கோவில் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட்டில் தினமும் 1000க்கும் அதிகமான பஸ்கள் வந்து செல்லும். இப்பகுதியில் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்டுக்கும், மெயின் ரோட்டில் இருந்து இணைப்பு பகுதி பள்ளமாக உள்ளது.வாகனங்கள் திரும்பும் போது ஏற்படும் அழுத்தம் காரணமாக உருவாகியுள்ள இப்பள்ளத்தை தவிர்க்க நுழையும் வாகனங்கள் வளைந்து சுற்றித் திரும்புவதால் எதிர் வரும் வாகனங்களும் தடுமாற்றத்திற்கு உள்ளாகிறது. பஸ்களில் பயணிக்கும் முதியோர், குழந்தைகள் வேகமாக இறங்கி ஏறும் போது உடல் பாதிப்பை சந்திக்கின்றனர். இவற்றை போக்குவரத்து அதிகாரிகள், நகராட்சி நிர்வாகம் சமப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள்,  பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Aug 12, 2024

விவசாய விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தும் வனவிலங்குகள்

 இராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,வத்திராயிருப்பு,, சேத்தூர் ,தேவதானம், மேற்குதொடர்ச்சிமலைவனப்பகுதிகளில்  யானை, காட்டுப்பன்றி, மிளா, காட்டு எருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய விலை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன.வனத்தை ஒட்டி உள்ள நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை  உள்ளிட்டவைகளை சமீப காலமாக காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்து 50 ஆண்டுகள் பலன் தந்த பலா மரங்கள் முதல் தென்னை மரங்களை உடைத்தும் குருத்துகளை பிடுங்கியும் சேதப்படுத்தி வருகின்றன. இது குறித்து அரசுக்கு இழப்பீடு வழங்க விண்ணப்பித்தால் அதிகாரிகள் காலதாமதம் செய்கின்றனர்..கூட்டமாக சேதப்படுத்தும் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டவும் காட்டுப்பன்றிகள், மான்களை கட்டுப்படுத்தி விளை நிலங்களை பாதுகாக்க ஒவ்வொரு குறைதீர் கூட்டத்திலும் விவசாயிகள் கலெக்டரிடம் முறையிடுகின்றனர். இவற்றுக்கு தீர்வாக வேளாண் துறை மூலம் ,மானிய விலையில் வேலி அமைக்க ஒதுக்கீடு செய்வதுடன், வனவிலங்குகள் சேதப்படுத்தும் பயிர்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்கி வேலி அமைக்க ஒப்புதல் வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.

Aug 07, 2024

ராஜபாளையத்தில் பாலப் பணிகளால் மக்கள் அவதி 

 ராஜபாளையம் நகர் பகுதி நடுவே செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக டி.பி மில்ஸ் ரோடு இருந்து வந்தது. இதன் மூலம் நகரின் நடுவே செல்லும் வாகனங்களை காந்தி கலை மன்றம் வரை கடந்து செல்ல மாற்றாக இருந்து வந்தது.இந்நிலையில் மாற்றுப் பாதையின் இரண்டு இடங் களில் வலுவிழந்திருந்த தரைபாலப் பணிகளை பள்ளி விடுமுறை அறி வித்த நேரத்தில் தொடங்காமல் ஒரு மாதம் கடந்து ஆரம்பித்து தற்போது  நான்கு மாதங்களாக முடிக்காமல் வைத்துள்ளனர்.இதனால் போக்குவரத்தில் தேசிய நெடுஞ் சாலையில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எதிரெதிரே வரும் வாகனங்களை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள் ளாகி வருகின்றனர்.மாற்று ஏற்பாடாக ஏற்க னவே இருந்த டி.பி மில்ஸ் ரோட்டில் தொடங்கப் பட்ட தரைப்பால பணி  களை விரைந்து செயல்பாட்டிற்குகொண்டு  வருவதுடன்  பணிகள் முடியும் வரை வாகன ஓட் டிகள் கடந்து செல்லும் சந்து பகுதிக,ளில் ஏற்பட் டுள்ள சிறு தடைகளை அகற்றி போக்குவரத்து சீர் செய்ய வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.

Aug 05, 2024

ராஜபாளையத்தில் விவசாயிகள் பெயரில் ,செங்கல் சூளைகளுக்கு விதி முறையை மீறி ,அதிக ஆழத்தில் வண்டல் மணல் கொள்ளை

மாநிலம் முழுவதும் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கண்மாயிகளில் மண் அள்ளுவதற்கு தாசில்தார் அளவில் அனுமதி அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தகல் தெரிவித்தது. இதை அடுத்து அரசியல் வாதிகளின் மேற்பார்வையின் கீழ் சம்பந்தப்பட்ட கண்மாயிகளில் விவசாயிகளை தவிர செங்கல் சூளை வியாபாரிகள், ரியல்எஸ்டேட் அதிபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருகின்றனர்.இதன்படி அனுமதிக்கப்பட்ட கடவுச் சீட்டுகளை படி எடுத்து வைத்து 3 அடிக்கு பதில் அதிக ஆழம் கண்மாய்களில் மண் தோண்டப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் பெயரில் சூளைகளுக்கும், பல்வேறு வணிக பயன்பாட்டிற்கும் மண் அள்ளி கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிக வருவாய் என்பதுடன் நடவடிக்கை என்பது கானல் நீர் ஆகி வருகிறது.அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ? என விவசாய  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

May 26, 2024

பிரண்டைகுளம் கண்மாய் நீர்த்தேக்க பகுதியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு

இராஜபாளையம் முடங்கியாறு ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகே பிரண்டைகுளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் தற்போதைய மழையால் நீர்வரத்து காணப்பட்டு நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. ஆனால் நீரின் முழு பரப்பளவிலும் தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்து போர்வை போல் மூடியுள்ளது.இதனால் நீரில் வாழும் மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தடுத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் நீரின் தரம் மாற்றமடைந்து பாதிப்பதாக தெரிவிக்கின்றனர்.தற்போது நெல் பயிரிட்டு, கோடையில் தண்ணீர் வரத்து உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளோம். இருப்பினும் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரை நீரை வேகமாக ஆவி ஆக்குவதுடன் துர்நாற்றம் ஏற்படும் விதமாக மாற்றி விடுகிறது. இதில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் நீரில் மூழ்கும் போது அழுகி துர்நாற்றம் வீசுகிறது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்காண்மாயில் தாமரைச் செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News