ராஜபாளையம் பள்ளி மாணவர்களின் ஆதார் அப்டேட்டிற்காக பள்ளியில் முகாம் நடத்த பெற்றோர்கள் எதிர்பார்ப்பு .
ராஜபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் அப்டேட் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு வாரத்திற்குள் இதற்கான கெடு என தகவல் வந்ததில் தினமும் ராஜபாளையத்தில் செயல்படும் ஏழு முகாம்களுக்கு மாணவர்களின்பெற்றோர் படை எடுத்தனர்.
மொத்தம் உள்ள ஆதார் சேவை மையங்களில் ஸ்டேட் பேங்க், நகராட்சி அலுவலகம் இரண்டும் பழுது காரணமாக செயல்படாத நிலையில் தனியார் வங்கி தாலுகா அலுவலகம் உள்ளிட்ட மற்ற இடங்களில் பள்ளி மாணவர்களு டன் பெற்றோர் கூடினர்.
பி.எஸ்.கே பார்க் அருகே நேற்று தனியார் வங்கியில் நுாற்றுக்கும் அதிகமான பெற்றோர்ஒன்று கூடியதால் சிக்கல் ஏற்பட்டது. தினமும் வந்து பதிவு செய்ய முடியாமல்திரும்பி செல்வதாக கூறி வங்கி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் மாணவர்களின் பெற்றோரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுகலைந்து போக செய்தனர்.
நாள் ஒன்றுக்கு 30 டோக்கன் மட்டும் வழங்குகின்றனர். அப்டேட்டிற்கான கால அவகாசம் இல்லாததால் தொலைதூரத்தில் இருந்து வந்துஏமாற்றத்துடன் திரும்புகிறோம். பள்ளி சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடுசெய்து மாற்று வழி காண வேண்டும், என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply