25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மக்களின் எதிர்பார்ப்பு

Dec 08, 2024

கிருஷ்ணன்கோவிலில் டோல்கேட் அமைத்து , தீவிரமாக திருமங்கலம் - ராஜபாளையம் இணை நான்கு வழிச்சாலை பணிகள்

 தமிழகத்தின் மதுரை மாவட்டத்தையும், கேரளாவின் கொல்லம் நகரத்தையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை மதுரை, விருதுநகர், தென்காசி - மாவட்டத்தின் முக்கிய நகரங்களான திருமங்கலம், கல்லுப்பட்டி, கிருஷ்ணன் கோவில், ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், சேத்துார், சிவகிரி, வாசுதேவநல்லுார், புளியங்குடி, கடையநல்லுார், தென்காசி, செங்கோட்டை நகரங்களின் மையப்பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகிறது.முதல் கட்டமாக திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரையுள்ள 71.6 கிலோ மீட்டர் துாரம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கிருஷ்ணன்கோவில் அருகே டோல்கேட் அமைகிறது.2025 ஜூன் மாதத்திற்குள் பணிகள் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Nov 25, 2024

ரோட்டில் திரியும் மாடுகளால் ஆபத்து

இராஜபாளையத்தில் இரவு நேரங்களில் பராமரிப்பின்றி ரோட்டில் திரியும் மாடுகள், நாய்கள் அதிகரித்து விட்டன. சாலை ஒரங்களிலும் நடுவிலும் ஒய்வெடுப்பதுடன் திடீரென கடக்கும் போது வாகனஒட்டிகள் மோதி காயம் அடைவதுடன் கால்நடைகளும் இறப்பை சந்திக்கின்றன. நாய்களை கட்டுப்படுத்த தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் ரோடுகளில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Nov 24, 2024

குடிமகன்கள், பயணிகள் அல்லாதவர்கள் ஒய்வு எடுப்பதும், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், மனநிலை பாதித்தவர்கள், ஒரு பகுதியை ஆக்கிரமித்து தங்குமிடமாக  மாறிய இராஜபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகள்

இராஜபாளையம் நகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம், தொண்டு நிறுவனங்கள், அரசு சார்பில் நிழற்குடைகள் அமைந்துள்ளன. பஞ்சு மார்க்கெட், மகப்பேறு மருத்துவமனை, பிஎஸ்கே பார்க், ஐவஹர் மைதானம், சொக்கர் கோயில்,டி.பி. மில்ஸ்.ரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முன்பு, தென்காசி ரோடு அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.நிழற்குடைகளில் பயணிகள் உபயோகிப்பதற்கு இயலாத வகையில் குடிமகன்கள், பயணிகள், அல்லாதவர்கள் ஒய்வு எடுப்பதும், ஆதரவற்றோர், பிச்சைக்காரர்கள், மனநிலை பாதித்தவர்கள், ஒரு பகுதியை ஆக்கிரமித்து தங்குமிடமாகவும், மாற்றி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் பயணிகளுக்கு இடையூ போன்றவற்றால் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் நிழந்குடையை விட்டு நிற்கவேணடி உள்ளது.PSK பார்க், பஞ்சு மார்க்கெட், அரசு மருத்துவமனை, ஐவஹர் மைதானம் போன்றவற்றில் உள்ள நிழற்குடைகளில் குடிமகன்களும், பயணிகள் அல்லாதோறும், அமர்ந்து கொண்டு பொண்கள், மாணவிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகின்றனர். இது தவிர நிழற்குடைகளை முறையாக பராமரிப்பு செய்வதில்லை. இதனால் குடிமகன்கள் விட்டுச் சென்ற பாட்டில், குப்பை பொருட்களும் குவிகின்றன .இதை சரி செய்ய வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். 

Nov 22, 2024

ஹிந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு ராஜபாளையம் வழியில் நேரடி ரயில்,ராஜபாளையம், தென்காசி, புனலூர், கொல்லம் வழியே திருவனந்தபுரத்திற்கு இரவு நேர ரயிலை இயக்க வேண்டும்.

விருதுநகர்மாவட்டம்இராஜபாளையம்வழியே, சென்னை, திருச்சி, மதுரை, கொல்லம், தஞ்சாவூர், கும்பகோணம், திருவாருர், மயிலாடுதுறைக்கு நேரடி ரயில் வசதி உள்ளது.பெங்களுரு, கோவை, திருவனந்தபுரம், பாநி, பொள்ளாச்சி, சேலம், பகுதிகளுக்கு அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஹிந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு அனைத்து பகுதிகளில் இருந்து ரயில்கள் உள்ளன. ஆனால் ராஜபாளையம் வழியில் நேரடி ரயில் இல்லை.ராமேஸ்வரம் கோயில், கோதண்டராமர் கோயில், அரிச்சல் முனை கடல், பாம்பன் பாலம், கடல் தீவுகள், கடல் படகு சுற்றுலா என அங்குபலஇடங்கள்உள்ளன.எனவேராமேஸ்வரம்திருவனந்தபுரம், இடையேராமநாதபுரம், விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, புனலூர், கொல்லம் வழியே திருவனந்தபுரத்திற்கு இரவு நேர ரயிலை இயக்க வேண்டும் என விருதுநகர் தென்காசி, மாவட்ட பயணிகள் எதிர்பார்க்கின்றனர். 

Nov 21, 2024

இராஜபாளையம் கண்மாய்களில் ஆகாய தாமரைகள்.

இராஜபாளையம் சுற்றியுள்ள புளியங்குளம், பிரண்டைகுளம், கடம்பன்குளம், பெரியாதி குளம், கொண்டனேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களும் நகரில் உள்ள ஊருணிகளும்,  ஆகாய தாமரை பாதிப்பில் சிக்கி உள்ளன.இராஜபாளையம் மலையொட்டிய பகுதிகளில் இருந்து உருவாகும் நீர் சுற்றுப்பகுதி கண்மாய்கள் முதல் மழைக்கு நீர் இருப்பை பெற்று விடும். நகர்பகுதி ஒட்டி உள்ளதால் கண்மாய்களில் குடியிருப்புகளிள் கழிவு நீர் என்று கலந்து விடுகிறது. இதனால் கழிவு நீரில் வேகமாக வளரும் ஆகாய தாமரை செழித்து வளர்வதுடன் நீர்படிப்பு பகுதிகளை ஆக்கிரமித்த வளர்ந்து விடுகிறது.இதன் காரணமாக தண்ணீர் வரும்போது பாசத்திற்கான கொள்ளளவு குறைந்து பாதிப்பு ஏற்படுத்துவதுடன் நீர்வற்றும் காலங்களில் மடைகள் வழியே பாசனத்திற்கு தண்ணீர் வெளியேற வழி இன்றி அடைப்பு ஏற்படுத்துகிறது. விவசாயிகளுக்கு சிக்கலை எற்படுத்தி வரும் ஆகாயத்தாமரையை நிரந்தரமாக அகற்றும் வழிமுறையை மேற்கொள்ள வேண்டி விவசாய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Nov 20, 2024

தொடர் விபத்துக்கு உள்ளாகி வரும் சத்திரப்பட்டி ரோடு

ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அடுத்த சத்திரப்பட்டி ரோட்டில் இருந்து கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அதிகம். தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்லும் இப்பகுதியின்  போக்குவரத்து  நெரிசல் காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் இந்த ரோட்டை அகலப் படுத்தியதுடன் வாகனங்கள் முந்துவதை தவிர்க்க மேம்பாலம் அடுத்த பகுதியில் இருந்து பொன்னகரம் நுழைவு பகுதி வரை சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.இந்நிலையில்  சாலையில் ஏற்பட்டுள்ள  பள்ளங்கள், ஆக்கிரமிப்பு, சென்டர் மீடியன் பகுதிகளில் வாகன ஒட்டிகள்  காணும் விதமான ரிப்லக்டர் இல்லாதது, மரக்கிளைகள் ரோடு வரை படர்ந்து வாகனங்கள் ஒதுங்க முடியாது, ,  சென்டர் மீடியன் அருகே மணல் குவிந்துள்ளது போன்ற பல சிக்கல்களால் இப்பகுதி வாகன ஒட்டிகள் தொடர் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பாதிக்கப்பட்டுள்ள இடங்களை நெடுஞ்சாலை துறையினர் முறையாக பராமரிப்பதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் கவனிப்பார்களா? இப் பகுதி  மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Nov 19, 2024

பஸ் வசதி இன்றி தென்றல் நகரில் ராஜபாளையம் மக்கள் தவிப்பு

ராஜபாளையம் தாலுகா அலுவலகம் அடுத்த செண்பகத்தோப்பு ரோட்டில் 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.நகர் பகுதியில் இருந்து 3 கி.மீ., தொலைவில்  அமைந்துள்ள இங்கிருந்து பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலைகள் வியாபார நிறுவனங்களுக்கு செல்ல முறையான அரசு பஸ் போக்குவரத்து, மினிபஸ்  போன்ற வாகன வசதி இன்றி தவிக்கின்றனர். அம்பேத்கர் நகர், திருவள்ளுவர் நகர், ராம் நகர், இந்திரா நகர், பச்சை காலனி, சக்தி நகர், சாஸ்திரி நகர், பேங்கர்ஸ் காலனி, தென்றல் நகர், சமத்துவபுரம் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் இருந்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல ஆட்டோக்கள் மட்டுமே ஒரே வழி. ஆட்டோக்களில் அவசரத்திற்கு வந்து செல்ல ரூ.200 வரை கட்டணம் ஆகிறதுவசதி வேண்டி தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து  மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Nov 17, 2024

செயல்பாட்டிற்கு  வராத அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம்.

 ராஜபாளையத்தில், அமைக்கப்பட்டு வரும் 864 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் துவங்கி 4 ஆண்டுகள் கடந்தும் ஒப்படைப்பு பணிகள் முடியாதது, குறித்து  ஏக்கத்தில் உள்ளனர். வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 3 மாடிகளுடன் 15 பிளாக்குகளாக மொத்தம் 864 தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது.ராஜபாளையம் செண்பகத்தோப்பு ரோட்டில் இடம் தேர்வு செய்து கடந்த 2020 மே மாதம். பூமி பூஜை நடந்து.  கட்டுமானப்பணி கொரோனாவால் தாமதமானது. பின் கட்டட பணி முடிந்தும்  மின் இணைப்பு வழங்காதது, பூங்கா அமைப்பதில் தாமதம், தற்போது கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் முடிவு பெறாதது என பல்வேறு காரணங்களால் தாமதமாகி கட்டட பணிகளுக்கு அடுத்து பயனாளிகள் தேர்வு, ஒப்படைப்பு என தாமதம் தொடர்கிறது. பல கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் விரைந்து ஒப்படைக்க வேண்டும். கடந்த ஆண்டு பிப். மாதம் பணிகள் முடிந்தும் தற்போது வரை தாமதிப்பது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர் .

Nov 12, 2024

சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி,

திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப்பேட்டைக்கு கோவை, திருப்பூர், நாமக்கல், தேனி, தாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக பெரிய, சின்ன வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. தினமும் 400 டன்னிற்கு அதிகமாக சின்ன வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இதன் உற்பத்தி தற்போது திண்டுக்கல் மட்டுமல்லாமல் பிற் மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இதனால் 2 நாட்களாக திண்டுக்கல் வெங்காயப்பேட்டைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை குறைந்து கிலோ ரூ.20க்குவிற்பனையானது.தற்போது மழைக்காலம் என்பதால் அவைகள் நனையாமல் இருக்க குடோன்களில் பாதுகாக்கும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இவற்றை விற்க முடியாத மொத்த வியாபாரிகள் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்துநீடித்தால்இன்னும்இதன்விலைகுறையவாய்ப்புள்ளதாகவியாபாரிகள்தெரிவித்தனர்.உற்பத்திவிவசாயிகள்கவலையடைந்துள்ளனர்.

Nov 11, 2024

சாலை ஓரம்  நிறுத்தப்படும் பஸ்களால் விபத்து அபாயம்.

ராஜபாளையம் நகர்பகுதியில் செல்லும் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். கர் ஏற்கனவே நீண்ட வருடங் களாக ஆக்கிரமிப்பு அகற்றாமலும், சாலையோர மின் கம்பங்களை ஓரமாக நகற்றி வைக்காமலும் ரோட்டின் அகலம் குறைந்துள்ளது.இந்நிலையில் பஞ்சு மார்க்கெட் அடுத்த வளைவு பகுதியில் அரசு, தனியார் பஸ்கள் நெடுஞ்சாலை ஓரத்தையே, வரிசையாக டிப்போவாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் நிகழ்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் டிரிப் முடிந்து மீண்டும் இயக்குவதற்கு நிறுத்த இடமின்றி இவ்வாறு செய்கின்றனர்.இதனால் வெளியூரிலிருந்து புதிதாக வரும் லாரிகள், சுற்றுலா பஸ் கள், கனரக வாகனங்கள் வளைவில் முந்தும்போது விபத்துகளை சந்திக்க நேர்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியும் வரை விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ்களை மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும் என மக்கள்  எதிர்பார்க்கின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News