25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Nov 08, 2024

கரிசல் இலக்கியத் திருவிழா - 2024 சிறந்த இளம் படைப்பாளர் விருதுக்கு படைப்புகளை அனுப்பலாம்

விருதுநகர் மாவட்ட கரிசல் இலக்கிய கழகத்தின் 2வது செயற்குழு கூட்டம் கரிசல் இலக்கியக் கழகத் தலைவர் / மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் 2வது கரிசல் இலக்கியத் திருவிழா - 2024 - டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் சிவகாசியில் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கரிசல் இலக்கிய கழகத்தின் வாயிலாக நடத்தப்படும் இக்கரிசல் இலக்கிய திருவிழாவினை முன்னிட்டு சிறந்த இளம் படைப்பாளர் விருது வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இவ்விருதுக்கு சிறுகதைத் தொகுப்பு, நாவல், ஆய்வுக் கட்டுரை போன்ற படைப்புகளை அனுப்பலாம்.  படைப்பாளர்கள் 35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளராக இருக்க வேண்டும்.  படைப்புகள் வெளிவந்த காலம் இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  சிறந்த இளம் படைப்பாளர் விருதுக்கான படைப்புகளை தங்களது விவரத்துடன் 30 நவம்பர் 2024- க்;குள் சனி, ஞாயிறு, அரசுவிடுமுறை நாள்கள் தவிர்த்து இதர வேலைநாள்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர். தொலைபேசி: 04562- 225596 என்ற அலுவலகத்தில்  நேரிலோ ஃ அஞ்சல் வாயிலாகவோ சமர்ப்பிக்கலாம்.மேற்கண்ட இளம் படைப்பாளர் விருதுக்கான படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்த படைப்புகளாக இருக்க வேண்டும். கரிசல் நிலவியல், வாழ்வியல், பண்பாடு, வழக்காறுகள், தொழில்கள், சமூகங்கள் மற்றும் இலக்கியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட படைப்புகளாக இருக்க வேண்டும்.சிறந்த படைப்புகள் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்படும் நூலுக்கு ரூ.50,000- பரிசு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 08, 2024

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு மருத்துவச்சான்றுடன் கூடிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ முகாம்

 விருதுநகர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும்  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில் மருத்துவ முகாம் காலை 10.00 மணி முதல் மாலை 1.00 மணி வரை நடைபெற உள்ளது.இம்முகாமில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவச்சான்றுடன் அடையாள அட்டை வழங்குதல் பணி மேற்கொள்ள உள்ளது. மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறுவதற்கு ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-4 உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும்.மேலும் விவரம் பெறுவதற்கு  மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்:04562-252068 எண்னை தொடர்பு கொள்ளலாம்.அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்; 08.11.2024 அன்று திருவில்லிபுத்தூர் ஆர்.சி.மேல்நிலைப்பள்ளியிலும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில், 15.11.2024 அன்று மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 22.11.2024 அன்று எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 29.11.2024 அன்று அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 06.12.2024 அன்று இராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு மேல்நிலைப்பள்ளியிலும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், 10.12.2024 அன்று  சாத்தூர் எட்வர்ட் நடுநிலைப்பள்ளியிலும்,விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில், 11.12.2024 அன்று விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 12.12.2024 அன்று வெம்பக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 17.12.2024 அன்று நரிக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும்,காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 19.12.2024 அன்று கல்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், 20.12.2024 அன்று சிவகாசி நகராட்சி எ.வி.டி உயர்நிலைப்பள்ளியிலும், பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ஒன்றிய அளவில்  நடைபெற உள்ள மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்  வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 07, 2024

‘Coffee With Collector' என்ற 119-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (06.11.2024)  இராஜபாளையம் சத்யா சிபிஎஸ்இ  பள்ளியை சேர்ந்த 11-ம் வகுப்பு  மற்றும் 12ம் வகுப்பு பயிலும் 60 மாணவர்களுடனான "Coffee With Collector” என்ற 119-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  119-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு,  இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்;ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.  

Nov 07, 2024

தாட்கோ நிறுவனத்தின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, பட்டய கணக்காளர்- நிறுவன செயலாளர் - செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் - ஆகிய போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு,  பட்டய கணக்காளர்- இடைநிலை (Chartered Accountant- Intermediate), நிறுவன செயலாளர் - இடைநிலை (Company Secretary- Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் - இடைநிலை (Cost and Management Accountant- Intermediate) ஆகிய போட்டி தேர்வுகளுக்கு தாட்கோவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.தாட்கோவின் முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர் - இடைநிலை (Chartered Accountant-Intermediate), நிறுவன செயலாளர் - இடைநிலை (Company Secretary-Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் - இடைநிலை (Cost and Management Accountant-Intermediate)  ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும் இப்பயிற்சி பெற விரும்பும் மாணக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒருவருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 07, 2024

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.அதன்படி, தனி நபர் கடன் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும் என்பது, தற்போது நகர்புறம் மற்றும் கிராமப்புறம் ஆகியவைகளுக்கு திருத்திய ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சமாகவும், திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் ஆண்டிற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20 இலட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம்; மற்றும் பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்சமாக ரூ.30 இலட்சமும் கடன் உதவி வழங்கப்படுகிறது.கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 இலட்சம் கடன் வழங்கப்படுகிறது.சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 இலட்சம் ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம் பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1.50 இலட்சம் கடன் வழங்கப்படுகிறது.  மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை /முதுகலை தொழிற் கல்வி / தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.2 இலட்சம்  வரை 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம், மாணவியர்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதத்திலும் ரூ.30 இலட்சம் வரையிலும் கல்வி கடனுதவி  வழங்கப்படுகிறது.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த பார்சி மற்றும் ஜெயின் ஆகிய  சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை,  வருமானச் சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவனங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide certificate),  கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது / செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.                                           

Nov 06, 2024

"Coffee With Collector” என்ற 118-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (05.11.2024)  குல்லூர்சந்தை  வீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் 45 மாணவர்களுடனான "Coffee With Collector”  என்ற 118-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு,  118-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால்  நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.இன்று நமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை அறியாமை தான். அறியாமை எனும் இருளை அகற்றுவது தான் கல்வி.  உங்களால் எவ்வளவு படிக்க முடிகிறதோ அதிலிருந்து பத்து முதல் 15 சதவீதம் கூடுதலாக படிக்க  முயற்சி செய்ய வேண்டும். ஒரு சராசரியான மாணவராக இருந்தாலும் கூட உங்களுக்கான நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டு, விழிப்புணர்வும், தேடலும் அதிகமாக இருந்தது என்றால் மிகப்பெரிய வாய்ப்புகள் இருக்கின்றது.அப்படிப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறக்கூடிய மாணவர்களாக  உயர வேண்டும்.இப்பொழுது நாம் எதுவும் புரியாமல் இருந்து விட்டோம் என்றால் நாளைக்கு ஒரு சராசரியான மனிதராகவே இருந்து விடுவோம். “தேடிச் சோறு நிதந்தின்று- பல சின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம் வாடித் துன்பமிக உழன்று- பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? – என்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கூற்றுக்கேற்ப ஒரு சாதாரணமான மனிதராக நான் இருக்கவில்லை. நான் வேடிக்கை மனிதன் அல்ல. நான் அடுத்தவருக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும்,   நான் இருந்த நிலையில் இருந்து என்னையும், என்னுடைய சமூகத்தையும், குடும்பத்தையும் என்னை சார்ந்தவர்களையும், வாழக்கூடிய பகுதியையும்  சற்றே உயர்த்தினேன் என்ற ஒரு நிலைக்கு செல்லக்கூடிய அளவுக்கு உழைக்கக்கூடிய, தேடக்கூடிய மனிதராக இருந்தால் அதுவே  வெற்றி. அப்படிப்பட்ட மனிதராக உருவாக வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், பள்ளி, கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பன்னிரெண்டாம் வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாயப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு  தேவையான  விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம்.மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Nov 06, 2024

பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு ,முதலமைச்சரின் பொதுநிவாரணநிதியிலிருந்து நிவாரணத்தொகைக்கான காசோலை

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(05.11.2024) 5 வெவ்வேறு பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்துகளில் மரணமடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.7 இலட்சம் மதிப்பிலான நிவாரணத்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் வழங்கினார்.அதன்படி, சேலம் மாவட்டம் , குப்பனூர் கிராமத்தில் வெள்ளியம்பட்டி என்ற இடத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையுரணி கிராமத்தை சேர்ந்த திரு.ஜெயராமன் என்பவரின் வாரிசுதாரரான அவருடைய மகன் திரு.சங்கரலிங்கம் என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும், விபத்தில் காயமடைந்த சிவகாசி வட்டம், வெற்றிலையுரணி கிராமத்தை சேர்ந்த திரு.முத்துராஜா என்பவருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும்,வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் மெ/ஸ்.லட்சுமி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மரணமடைந்த விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், திருத்தங்கல் கிராமத்தை சேர்ந்த திரு.குருமூர்த்தி என்பவரின் வாரிசுதாரரான அவருடைய சகோதரி திருமதி சுப்புலட்சுமி என்பவருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும்,விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமம், (உட்கடை) செங்கமலப்பட்டியில் இயங்கி வரும்  தி/ள்.சுதர்சன் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மரணமடைந்த சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தை சேர்ந்த    திருமதி மல்லிகா என்பவரின் வாரிசுதாரரான அவருடைய தாயார் திருமதி நாகலட்சுமி என்பவருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும் மற்றும் சிவகாசி வட்டம், காரிசேரி கிராமத்தை சேர்ந்த திருமதி இந்திரா என்பவருடைய வாரிசுதாரரான அவருடைய கணவர் திரு செல்வம் என்பவருக்கு ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையினையும் என மொத்தம் ரூ.7 இலட்சம் மதிப்பிலான நிவாரணத்தொகைக்கான காசோலைகளை    மாவட்ட ஆட்சித்தலைவர்   அவர்கள் வழங்கினார்.

Nov 06, 2024

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவிற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறும் பட்டம்புதூரில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள அரசு விழாவிற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறும் பட்டம்புதூரில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட  ஆட்சித்தலைவர் முனைவர் வீ. ப.ஜெயசீலன்,I A S,  அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஏ.ஆர் ஆர். சீனிவாசன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு  அவர்கள் ஆகியோர் இன்று (05 11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர் 

Nov 06, 2024

அனுப்பங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வடக்கு ஊரணி தூர்வாரப்பட்டு வரும் பணிகளை ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அனுப்பங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வடக்கு ஊரணி தூர்வாரப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.I A S., அவர்கள்  (05.11.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Nov 06, 2024

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் உலமாக்களுக்கு மானிய விலையில் புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 10 வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்க ரூ.25,000/- அல்லது வாகனத்தின் விலையில் 50% இதில் எது குறைவோ அத்தொகையை மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை தலைவராகவும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அவர்களை உறுப்பினர் செயலர்/கூட்டுநராகவும், முன்னோடி வங்கியின் மேலாளர் உறுப்பினராகவும், மற்றும் மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளரை உறுப்பினராகவும் கொண்டு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட பயனாளிகள் உரிய விண்ணப்பத்துடன் வாகனம் வாங்குவதற்கான விலைப்புள்ளி பட்டியல்/விலைப்புள்ளி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வயதுச் சான்றிதழ், குடும்ப அட்டை, வயதுச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மாற்றுத்திறனாளியாக இருப்பின் உரிய அலுவலரிடம் பெற்ற சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வித்தகுதி சான்றிதழ் (குறைந்த பட்சம் 8-வது தேர்ச்சி/தோல்வி) வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், IFSC & MICR Code  விவரங்கள் அடங்கிய வங்கி கணக்கு புத்தகத்தின் முன் பக்க நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்ஃப் வாரிய கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (2வது தளம்) விருதுநகர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 73 74

AD's



More News