25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம், குடிநீர் விநியோகம் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் நகராட்சிப் பகுதிகளில் தூய்மை இந்தியா திட்டம், குடிநீர் விநியோகம் மற்றும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு ஊரகப்புற வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I AS ., அவர்கள்  (05.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

திடக்கழிவு மேலாண்மை மற்றும் நுண் உர மையம் ஆய்வு:

சிவஞானபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 ன் படி தினசரி வீடுகள் தோறும் நான்கு விதமாக குப்பைகளை பிரித்து வழங்குவதை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பொது இடங்களில் குப்பைகள் தேங்காதவாறு தூய்மையைப் பராமரிக்க அறிவுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, தூய்மை பாரத இயக்கத்தின் (Swachh Bharat Mission) கீழ்* கூரைக்குண்டு ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நுண் உர செயலாக்க மையத்திற்குச் (Micro Composting Centre) சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு ஊராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவதைப் பார்வையிட்டார்.மேலும், இயற்கை உரம் தயாரிக்கும் பணிகளைத் தொய்வின்றி செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு:

குப்பை கிடங்குகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் தீ விபத்துகள் (தீ எரிதல்) ஏற்படக் கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

நேரடி ஆய்வு:

நகராட்சியின் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையங்கள் (MCC), மறுசுழற்சி மையங்கள் (MRF) மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாடு:

          நகராட்சியில் *5 MCC* (நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம்) மற்றும் *3 MRF* (மறுசுழற்சி மையம்) செயல்பாட்டில் உள்ளதாகவும், தற்போதுள்ள 2 MCC மையங்களுக்குப் புதியதாக *அரைக்கும் இயந்திரம் (Shredding Machine)* மற்றும் *கடத்து பட்டை (Conveyor Machine)* கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

          மேலும், MCC-ல் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை விவசாயிகளுக்கு அதிகளவில் விநியோகம் செய்ய வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

குடிநீர் தரம் மற்றும் விநியோக இடைவெளி ஆய்வு:

அதனைத் தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் குறித்தும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் (Overhead Tanks) தூய்மைத் தன்மை குறித்தும் ஆய்வு செய்தார்.

வல்லநாடு CWSS (பழைய திட்டம்) + சீவலப்பேரி (புதிய திட்டம்): 6.5 MLD ஆனைக்குட்டம் உள்ளூர் நீர்ஆதாரம்: 1.00 MLD என மொத்தம் 2 தரைமட்டத் தொட்டிகள் வழியாக, 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு நீரேற்றம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் 36 வார்டுகளுக்கும் *2 நாட்களுக்கு ஒருமுறை* சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

குடிநீர் விநியோகத்தினை அதிகாரிகள் தொடர்ந்து முறையாகக் கண்காணிக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கான சீரான குடிநீர் விநியோகத்தினை எவ்வித தடையுமின்றி உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

துப்புரவுப் பணிகள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நலன்:

நகராட்சியில் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர், அவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து அவர்களிடம் கேட்டறிந்ததுடன், அவர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாடு குறித்தும் விவாதித்தார்.சிறப்பு நிகழ்வாக, உலக சுற்றுச்சூழல் தினம்-2026 னை முன்னிட்டு, MRF வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு:

ஆய்வின் இறுதி நிகழ்வாக, அல்லம்பட்டி வே.வ. வன்னிய பெருமாள் துவக்கப்பள்ளிக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர், அங்கு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்' கீழ் வழங்கப்படும் உணவின் தரத்தினை நேரில் சுவைத்து ஆய்வு செய்தார். பள்ளி சமையல் அறையின் தூய்மையைப் பராமரிக்கவும், குழந்தைகளுக்குக் கால அட்டவணைப்படி சத்தான மற்றும் சுவையான உணவினைத் தடையின்றி வழங்கவும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சமையலர்களுக்கு அறிவுறுத்தினார்.இந்நிகழ்வின் போது, நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News