25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் தொடர்பாக களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (08.06.2026) அன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

“மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027” பணிகளில் ஈடுபடவுள்ள மாவட்ட அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்றுநர்கள் (Field Trainers) 68 நபர்களுக்கு 08.06.2026 முதல் 10.06.2026 வரை மற்றும் 15.06.2026 முதல் 17.06.2026 வரை என இரண்டு பகுதிகளாக  மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு  நடைபெற உள்ளது. 

தற்போது முதல் பகுதி பயிற்சி வகுப்பு 08.06.2026 அன்று மாவட்ட ஆட்சியர்அவர்களால் துவக்கி வைக்கப்பட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியின் முக்கியத்துவம் குறித்து, எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்களின் உருவாக்கத்திற்கு மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை விரிவாக எடுத்துரைத்தார். களப்பணியாளர்கள் அனைவரும் எவ்வித தொய்வுமின்றி, துல்லியமான விவரங்களைச் சேகரிக்கும் வகையில் தங்களை இப்பயிற்சியில் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்வில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் திரு. சின்னத்துரை, புள்ளியியல் ஆய்வாளர் திரு.ப.  ராஜா மற்றும் முதன்மை பயிற்றுநர்கள்  திரு.  ப. கருப்பசாமி, புள்ளியியல் துணை இயக்குநர் திரு. கெ. கணேசன் புள்ளியியல் அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் கணக்கெடுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News