25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..!  காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய கார் உற்பத்தி வாகன நிறுவனங்கள் அதிர்ச்சி..! காந்தம் ஏற்றுமதியை நிறுத்தும் சீனா.

இந்தியாவில் மின்சார கார் உற்பத்தி வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், சீனா திடீரென மின்சார கார் உற்பத்திக்கு தேவையான காந்தங்கள் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.மின்கார் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும் அரிய உலோகமான காந்தங்கள் பெரும்பாலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா இந்த உலோகங்களில் 90% அளவை சீனாவிலிருந்து பெறுகிறது.திடீரென சீனா இந்த காந்தங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது டாடா, மஹிந்திரா, மாருதி சுசுகி போன்ற நிறுவனங்களின் உற்பத்தி செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள், அமெரிக்காவுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையாக கூறப்படுகிறது. ஆனால் அதன் தாக்கம் இந்தியாவின் கார் உற்பத்தி வளர்ச்சிக்கே இடையூறாக உள்ளது. பிற நாடுகளிலிருந்து காந்தங்களை பெற முயற்சி செய்தாலும், அதன் செலவு அதிகமாகும். இதனால் உற்பத்தி மொத்த செலவிலும் உயர்வை ஏற்படுத்தும்.தற்போது சீனாவுடன் இந்திய உறவுகள் சீராக இல்லாததால், பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளும் தாமதமாகும் என கூறப்படுகிறது. இதனால், இந்திய வாகனத் துறை நிறுவனங்கள் பரபரப்பான சூழ்நிலையில் உள்ளன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News