ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (11.06.2026) 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை 15 மணி நேரம் தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பில் பயிலும் மு.யாசினி, மா.பவித்ரா, கு.சாருமதி மற்றும் சு.மது ஸ்ரீ மற்றும் 9 ஆம் வகுப்பில் பயிலும் மு.அனுஷா, மா.மாதவி மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் கி.ஸ்ரீவர்ஷினி ஆகிய 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை மனனமாக 15 மணி நேரம் தலைகீழாக எழுதும் நிகழ்வினை தொடங்கியுள்ளனர்.
சாதனை நிகழ்வு:
1330-வது திருக்குறளிலிருந்து தொடங்கி 1-வது திருக்குறள் வரை தலைகீழ் வரிசையில் (Reverse Order) முழுமையாக மனனம் செய்து, 15 மணி நேரத்தில் எழுதி முடிக்கும் சாதனை முயற்சி.
சிறப்பு நிகழ்வு: மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி ஆய்வு மற்றும் ஊக்கப்படுத்துதல்.
இச்சாதனை நிகழ்வினை, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், தமிழ் வளர்ச்சித் துறை, கரிசல் இலக்கியக் கழகம், மகிழ்வோர் மன்றம், கோவில்பட்டி, ரோட்டரி சங்கம், கோவில்பட்டி போன்ற இயக்கங்கள் கண்காணிக்கின்றனர்.மாணவியர்களின் சாதனை முயற்சியினை பாராட்டும் விதமாக, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வாழ்த்தினை மாணவியர்களுக்கு தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply