உலக கோப்பை வெல்வதே கனவாக இருந்தது என கேப்டன் ஹர்மன்பிரீத் பெருமிதம் .
நவி மும்பையில் நடந்த பெண்கள் உலக கோப்பை பைனலில் (50 ஓவர்), இந்திய அணி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 36, முக்கிய காரணம். இவரது தந்தை ஹர்மந்தர் சிங் புல்லாருக்கு கிரிக்கெட், கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தது. பின் பஞ்சாப் மோகா நகர கோர்ட்டில் கிளார்க் பணியில் 'செட்டில்' ஆனார்.
தந்தை பயிற்சி அளிக்க, இளம் வயதிலேயே ஹர்மன் பிரீத், கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். தற்போது 'உலகை' வென்று உச்சம் தொட்டுள்ளார். கிரிக்கெட் பற்றி அதிகம் அறியாத ஒருவர், நம் நாட்டின் பெண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என கனவு கண்டது பெரிய விஷயமல்லவா.
தனிப்பட்ட முறையில் உலக கோப்பை வென்ற தருணம் மிகவும் உணர்ச் சிகரமானது. கிரிக்கெட் விளையாட துவங்கிய நாளில் இருந்து உலக கோப்பை வெல்வதே கனவாக இருந்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால், கோப்பையை 'மிஸ்' செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன் எனகூறினார்.
உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் மோடி நேரில் அவரது டில்லி வீட்டில் இன்று மாலை சந்தித்து ,பாராட்டு விழா நடக்க உள்ளது. இதற்காக ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா உள்ளிட்ட இந்திய அணியினர், மும்பையில்இருந்து தனி விமானம் மூலம் நேற்று டில்லி வந்தனர்.
0
Leave a Reply