ஆப்பிளை விடவும் சத்து நிறைந்த பேரிக்காய்.
பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறுகளை ஒழுங்குப்படுத்தக்கூடியது. 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து அளவில், 24 சதவீதம் பூர்த்தி செய்கிறது. கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவு ம் உள்ள பேரிக்காய், ஆப்பிளை விடவும் சத்து நிறைந்தது.இதனை பெண்களுக்கான வரப்பிரசாதம்.
கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெறும். குழந்தை பெற்ற பெண்கள் காலை மாலை 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.
ஹீமோகுளோபின் பிரச்சனை மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், இந்த பேரிக்காயை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.
இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் கெட்ட கொழுப்பை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது. சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களை வெளியேற்ற உதவுகிறது.
உணவு சாப்பிடுவதற்கு முன் இந்த பழத்தை சாப்பிட்டால், உணவிலுள்ள கொழுப்பு உடலில் தங்குவது தடு க்கப்படுகிறது. 100 கிராம் பேரிக்காயில் 56கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைப்பதில் உதவுகிறது.
பேரிக்காய் கிட்டத்தட்ட 84 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்தது. இதனால், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலுக்கு ஆற்றலை தந்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இந்த பேரிக்காயில் நிறைந்துள்ளது. இரவு சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.
உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இந்த பேரிக்காய்க்கு உண்டு. பேரிக்காய் சாப்பிட்டால், எலும்புகள், பற்கள் உறுதியாகும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் டைப் 2 நீரழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.
பேரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் நீங்கும். வாய்ப்புண மற்றும் வயிற்றுப்புண்களை நீக்குகிறது.
0
Leave a Reply