கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க கம்பங் கூழ்
சிறுதானியங்களில் 11.8 சதவீ தம் என்ற அளவில் அதிகமான புரதச்சத்து கம்பு தானியத்தில் தான் உள்ளது.வைட்டமின்-ஏ உடலில் உருவாவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன், என்ற சத்துப்பொருள் கம்பு பயிரில் அதிகம் உள்ளது. இதுதவிர, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்-சி, ரிபோ பிளேவின், நியாசின் சத்துக்கள் உள்ளன.கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க கம்பங் கூழ் உதவுகிறது.
கம்பு தானியத்தை அடிக்கடி உணவாக உட்கொள்ளும்போது 2-ம் வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. கம்பு தானியத்தில் உள்ள அதிக நார்ச்சத்து குடலில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து செரிமானத்தை மெதுவாக செய்வதால் ரத்த குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. மேலும், கம்பில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவு உடலில் கட்டுப்படுகிறது.
கம்பு தானியத்தில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை குறைக்க ஒன்றிணைந்து செயல்படுவதால் இதயம் சீராக இயங்க உதவுகிறது.
பெண்களுக்கு ஏற்படும் பாலி சிஸ்டிக் ஒவரி சிண்ட்ரோம் எனும் கர்ப்பபை கட்டிகள், ஹார்மோன் சுரப்பு பாதிப்பு காரணமாக ஏற்படுகிறது. இதனை தடுக்க கம்பு உத வுகிறது. கம்பு தானி யத்தில் உள்ள அதிக நார்ச்சத்து மற் றும் மெக்னீசியம் ரத்த சர்க்கரை மற்றும் இன் சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதால் கட்டிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
0
Leave a Reply