71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2003 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கூட்டுறவுத் துறையின் மூலமாக நடைபெற்ற 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் 2003 பயனாளிகளுக்கு ரூ.16.76 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை (19.11.2024) வழங்கினார்கள்.
அதன்படி, 270 பயனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பிலான சிறு வணிகக்கடன் உதவிகளையும், 856 பயனாளிகளுக்கு ரூ.7.2 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழுக்கடன்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.1.8 இலட்சம் மதிப்பிலான மத்திய கால கடன் உதவிகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சம் மதிப்பில் பணிபுரியும் பெண்களுக்கான கடன் உதவிகளையும், 22 பயனாளிகளுக்கு ரூ.16.72 இலட்சம் மதிப்பில் மகளிர் தொழில் முனைவோர் கடன் உதவிகளையும், 24 பயனாளிகளுக்கு ரூ.10.55 இலட்சம் மதிப்பில் மாற்றுத்திறனாளிக் கடன் உதவிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ.28.25 இலட்சம் மதிப்பில் சம்பளக்கடன்களையும், 1 பயனாளிகளுக்கு ரூ.99000/- மதிப்பிலான வாகனக் கடன் உதவிகளையும், 7 பயனாளிகளுக்கு ரூ.20.50 இலட்சம் மதிப்பிலான வீட்டு அடமானக் கடன் உதவிகளையும், 112 பயனாளிகளுக்கு ரூ.56 இலட்சம் மதிப்பிலான முத்ரா கடன்களையும், 2 பயனாளிகளுக்கு ரூ.8.48 இலட்சம் மதிப்பிலான டாம்கோ கடன் உதவிகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான டாப்செட்கோ கடன் உதவிகளையும், 1 பயனாளிகளுக்கு ரூ.60000/ மதிப்பிலான தாட்கோ கடன் உதவிகளையும், 2 பயனாளிகளுக்கு ரூ.50,000ஃ- மதிப்பிலான நாட்டுப்புற கலைஞர்களுக்கான கடன் உதவிகளையும், 1 பயனாளிகளுக்கு ரூ.95000/- மதிப்பிலான கல்வி கடன் உதவிகளையும், 8 பயனாளிகளுக்கு ரூ.7.25 இலட்சம் மதிப்பிலான பண்ணை சாராக் கடன் உதவிகளையும், 10 பயனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பிலான சிறுகுறு நடத்தரக் கடன் உதவிகளையும், 7 பயனாளிகளுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பிலான கைம்பெண் கடன் உதவிகளையும், 16 பயனாளிகளுக்கு ரூ.16 இலட்சம் மதிப்பிலான கலைஞர் கனவு இல்லம் கடன் உதவிகளையும், 1 பயனாளிக்கு ரூ.13 இலட்சம் மதிப்பிலான வீட்டுக்கடன் உதவிகளையும், 649 பயனாளிகளுக்கு ரூ.6.43 கோடி மதிப்பிலான கேசிசி பயிர்க்கடன் உதவிகளையும் என மொத்தம் 2003 பயனாளிகளுக்கு ரூ.16.76 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மேலும், சிறப்பாக செயலாற்றிய சாத்தூர் கிளை மத்தியக் கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கிக்கான பாராட்டு சான்றிதழினையும், பாளையம்பட்டி மற்றும் மகாராஜபுரம் ஆகிய கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
மேலும், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம் மூலம் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/-, குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பெண்களை மையப்படுத்தி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.இது போன்ற எண்ணற்ற திட்டங்களை பெண்களின் உரிமைக்காகவும், மேம்பாட்டிற்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.இந்த கூட்டுறவுத்துறை மென்மேலும் வளர, அனைவரும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
நமது மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த பெண்கள் ஏறத்தாழ 1.5 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் அவர்களுக்கான வங்கி கடன், வங்கிகளுக்கான சேவை எல்லா பகுதிகளிலும் கிடைக்கப் பெற்றாலும் விரைவாக வழங்கக்கூடிய சேவை என்பது இன்னும் சற்று சுணக்கத்தோடு தான் இருக்கிறது.இன்று தனியார் நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையை காண முடிகிறது.எனவே, இன்று சேவைகள் வழங்குவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. சேவைகளை வழங்குவதற்காக கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள்,இந்திய தபால் வங்கிகள் என நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் இன்னும் விரைவாக வழங்குவதற்குரிய தேவை கிராமப்புற பகுதிகளில் குக்கிராமங்களில் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இன்னும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக சங்கங்களினுடைய உறுப்பினர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு குறிப்பாக நமது பகுதிகளில் இருக்கக்கூடிய கைத்தறி நெசவு சங்கங்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் போன்றவை இன்னும் சிறப்பாக செயல்படுவதற்குரிய வாய்ப்புகளும், அதற்கான அரசினுடைய திட்டங்களும் நிறைய இருக்கிறது.
அவற்றை நன்கு பயன்படுத்திக் கொண்டு இன்னும் நிறைய உறுப்பினர்கள் கூட்டுறவு சங்கங்களில் இணைத்து, அந்த சங்கங்களினுடைய செயல்பாடுகளை மிகப்பெரிய அளவில் கொண்டு சென்று, உறுப்பினர்களுடைய வாழ்க்கை தரத்தில், அந்த பகுதிகளினுடைய மக்களின் வாழ்க்கை தரத்தில் மிகப்பெரிய மேம்பாட்டை செய்வதாக நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இவ்விழாவில் கூட்டுறவு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கப்பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், பணியாளர்கள் அனைவரும் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்.
0
Leave a Reply