25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில்  ராம்கோ சமூக சேவை பிரிவு தலைவர் நிர்மலா ராஜா  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இளம் தொழில் முனைவோர் சங்கம் சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நடந்தது. >> பூபதிராஜூ கூட்டுறவு நாணய வங்கி நுாற்றாண்டு விழா >> ராஜபாளையம் குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டை தவிர்க்க நமக்கு நாமே திட்டத்தில் கண்காணிப்பு கேமரா. >> வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >>


நுண் நெகிழிகளால் இப்படி ஓர் ஆபத்தா?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நுண் நெகிழிகளால் இப்படி ஓர் ஆபத்தா?

நெகிழிகளால்சுற்றுச்சூழலுக்குஆபத்து  ஏற்படுகிறதுஎன்பதை நாம் அறிவோம். இந்த நெகிழிகள் உடைந்து நுண் நெகிழிகளாக மாறுகின்றன. இவை, 0.001 மில்லி மீட்டருக்கும் குறைவான நெகிழித் துகள்கள்,நுண்நெகிழிகள்என்றுஅழைக்கப்படுகின்றன. நம்மைச் சுற்றி எல்லா இடங்களி லும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. உணவு, தண்ணீர், சுவாசம், ஏன் நம் தோல் வழியாகக் கூட உடலுக்குள் நுழையலாம். இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்றுஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரியாவைச் சேர்ந்த வியன்னா பல்கலை மேற்கொண்ட ஆய்வில் நுண் நெகிழிகள் தொடர் பான அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நம் உடலுக்குள் செல்லும் நுண் நெகிழிகள் , உடலின் சில பாகங்களில் அப்படியே தங்கி விடுகின்றன. பாக்டீரியா, வைரஸ் அல்லது வேறு கிருமிகளால் நோய்கள் ஏற்படும் போது அந்தக் கிருமிகளைக் கொல்வதற்காக ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம்.

அப்படியான மருத்துகளை இந்த  நுண் நெகிழிகள் உறிஞ்சிக் கொள்கின்றன. எனவே, அந்தக் கிருமிகள் கொல்லப்படாமல் சுதந்திரமாகப் பெருகுகின்றன. இதனால் நோயின் பாதிப்பு அதிகமாகும். அதுபோல நாம் உட்கொண்ட  மருந்தை எதிர்க்கும் வல்லமை யும் அந்தக் கிருமிகள் வளர்த்து கொள்கின்றன. வருங்காலத்தில் இது மிகப்பெரிய அபாயமாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். நுண் நெகிழி மாசைக் கட்டுப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News