பாசிப்பயறு பிரியாணி
தேவையான பொருட்கள் - முளைகட்டிய பாசிப்பயறு 100 கிராம், பச்சரிசி 100 கிராம், தேங்காய் அரை மூடி, மிளகாய் 5, பூண்டு 2, இஞ்சி சிறிதளவு, பட்டை 1 துண்டு, கிராம்பு 2, ஏலக்காய் 1, பெல்லாரி 1, தக்காளி 1, ரீஃபைண்ட் ஆயில் 2 ஸ்பூன், பெருஞ்சீரகம் கசகசா 1 டீஸ்பூன், முந்திரி பருப்பு 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு.
செய்முறை - குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலம் போடவும், பின் இஞ்சி பூண்டு, மிளகாய், பெருஞ்சீரகம், கசகசா, மல்லித்தழை முந்திரிப்பருப்பு எல்லாவற்றையும் நைஸாக அரைத்து பின் தேங்காய் பாலையும், குக்கரில் ஊற்றி வதக்கவும், தேங்காய்ப் பால் கொதித்ததும் தேவையான அளவு உப்பு போட்டு, அரிசி முளைப்பயிறு போட்டு குக்கரை மூடி வைக்கவும். வெந்ததும் இறக்கவும். சத்தான பிரியாணி.
0
Leave a Reply