இராஜபாளையத்தில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை
இராஜபாளையம் நகரச் செய்திகள்
வடக்கு மலையடிப்பட்டி சஞ்சீவிநாதர் சிவன் கோயிலில் சித்தர்கள் குருபூஜை
இராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சஞ்சீவி நாதர் சிவன் கோயிலில் 18 சித்தர்கள் குருபூஜை விழா நடந்தது அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.இராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா, தொழிலதிபர் ராம் சிங் ராஜா பங்கேற்று வேட்டி சேலை வழங்கினர் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை சஞ்சீவிநாதர் திருக்கோயிலில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இராஜபாளையம் விவசாய கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள்
இராஜபாளையம் விவசாய கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயில் வளாகத்தில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். அடுத்து ஆற்றிலும் பூஜை நடந்தன ராஜிக்கள் நான்குகோட்டை, தலைவர் சின்ன வெங்கட்ட ராஜா உள்ளிட்ட சாவடி தலைவர்கள், நகராட்சி தலைவர் பவித்ரா கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விவசாய கமிட்டி தலைவர் முருகன் நிர்வாகிகள் விவேகானந்த ராஜா, வெங்கடேச ராஜா செய்திருந்தனர்.
இராஜபாளையத்தில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை
இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய கூலி ஆள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேளாண் துறை முறையான ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர். ஆள் கிடைத்தாலும் பணிகளில் முழுத்திறனையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக இயந்திர நடவினை நாடி வருவதுடன், ஏக்கருக்கு ரூ.2500 வரை மீதம் ஆவதாகவும் தெரிவித்துள்ளனர். இயந்திரநடவை செய்தால் விதை நெல் முதல் நடவு கூலியாட்கள் வரை ஏக்கருக்கு ரூ2500 வரை மீதமாகிறது. இதுகுறித்து அரசு சார்பில் வேளாண்துறை அதிகாரிகள் விளக்கி கூறி தெளிவு படுத்தினால் விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படும்.
0
Leave a Reply