சிறப்பு உலக திறனாய்வுத்திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டி
மாவட்ட அளவிலான சிறப்பு உலக திறனாய்வுத்திட்டம் 2022-23ம் ஆண்டு நடத்துவது சார்பாக, 6,7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட உலக திறனாய்வு தேர்வுகளில் 8,9 மற்றும் 10 மதிப்பெண்கள் பெற்ற முதல் 3 மாணவ/ மாணவியர்களுக்கு 27.04.2023 அன்று சிறப்பு உலக திறனாய்வுத்திட்டத்தின் கீழ் விளையாட்டு போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறும் முதல் 3 மாணவ/மாணவியர்களுக்கு டி-சர்ட்டு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
நடைபெறவிருக்கும் விளையாட்டு போட்டிகள் விபரம்-
100மீட்டர், 200மீட்டர், 400மீட்டர் ஒட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டுஎறிதல் மாணவ, மாணவியர் இருபாலருக்கும் அவரவர் வகுப்பு பிரிவில் நடைபெறும்.
போட்டியில் கலந்து கொள்ள வருபவர்கள் தவறாது தங்களது வயது சான்றிதழ் அல்லது வயது குறித்த Bonafide certificate பள்ளி தலைமை ஆசிரியர்/ஆசிரியையிடமிருந்து பெற்று வர வேண்டும், வயது சான்றிதழ் இல்லாதவர்கள் கண்டிப்பாக விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இயலாது. விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு காலை 9.00 மணிக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள வரும் மாணவ/ மாணவியருக்கு தினப்படி/பயணப்படி ஏதும் வழங்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply