திருப்பதி ஸ்ரீனிவாசனின் தாயார் வகுளாதேவி
திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்..திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும். திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்..திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்.
திருப்பதி அன்னதான மண்டபத்திற்கு நேராக இருக்கும் வகுளா தேவி அங்கு நடைபெறும் அன்னதானத்தை, அன்னதான மண்டபத்திலிருக்கும் சிறு துவாரத்தின் மூலம் மேற்பார்வையிடுவதாக ஐதீகம்திருப்பதி வெங்கடேஸ்வரரை தனதுமகன் போல பாவித்து அவரை அன்புடன் பார்த்துக் கொண்டவர் வகுளா தேவி அம்மன் ஆவாள்.குடும்பத்தில் ஒற்றுமையும்,அன்பும், திருமண வாழ்வு இன்பமாகஅமையவும்,குணத்திலும்,ஞானத்திலும் சிறந்து விளங்கும் நல்ல குழந்தைகள் பிறக்கவும்,தாயுள்ளம் கொண்ட வகுளாதேவியை நாமும் வழிபட நமக்கு நல்ல குழநதைகள் பாக்கியம் கிட்டும்.எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.
0
Leave a Reply