ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க.....
நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்க ஒரே ஒரு கிளாஸ் இதை ஊற்றுங்க போதும்..
தேவையான பொருட்கள்:
1. எப்சம் சால்ட் - 2 டேபிள் ஸ்பூன்
2. சோயா பீன்ஸ் - 4
3.மஞ்சள்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
4 தண்ணீர்-1கிளாஸ்
10 நாளில் பூக்காத ரோஜா செடியினையும் பூக்க வைப்பதற்கு இந்த டிப்ஸ்ட்ரை பண்ணுங்க
செய்முறை:-ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 4 சோயா பீன்ஸையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் எப்சம் சால்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதனை வாரத்திற்கு ஒரு நாள் என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.
ரோஜாச்செடியில் அதிக பூக்கள் பூத்து குலுங்க: தேவையான பொருட்கள்:
தண்ணீர் - 1/2 லிட்டர் வாழைப்பழம் தோல் - 3 காபி தூள் - 1 ஸ்பூன் டீ தூள் - 3 ஸ்பூன் தயிர் - 1/2 கப்
செய்முறை-:1/2 லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதித்ததும், அதில் வாழைப்பழ தோல்களை சிறிதாக நறுக்கி போடவும்.வாழப்பழ தோல் நன்றாக வேகும் வரை கொதிக்கவிடவும் அதனுடன் எடுத்துவைத்துள்ள காபி தூள் மற்றும் டீ தூள்களை சேர்த்துக்கொள்ளவும்.
நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அனைத்து விட்டு கலவையை ஆற விடவும்பின்பு கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, அதனுடன் தயிரை கலக்கவும்..தயிரை கலந்த பின்னர் அந்த பாத்திரத்தில் இருந்து ஆவி வெளியே செல்லாதவாறு நன்றாக 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.24 மணி நேரத்திற்கு பிறகு இதனை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் இந்த கலவையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை உங்களது ரோஸ் செடிக்கு தெளிப்பதால் உங்கள் செடிகளில் அதிகம் பூக்கள் பூக்கும்.
0
Leave a Reply