கொத்தமல்லி, புதினா வளர்க்கும் முறை
பிரிட்ஜில் சேமித்து வைத்தாலும் சமைக்கும்போது பிரஷ்ஷாக போடுவது போல இருக்காது. தினமும் கடையில் சென்று வாங்கி வரவும் முடியாது. அதனால் வீட்டிலேயே சிறியதாய் ஒரு பூந்தொட்டியிலேயே ஓரிரு நாட்களிலேயே வளர்த்து விட முடியும். தினமும் நமக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் பறித்து கமகமவென சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நாம்செய்ய வேண்டியது மிக எளிமையாள வேலை தான். ஒரு தொட்டியில் மண்ணை சரியான ஈரப்பதத்தில் இருக்கும்படி எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு காய்ந்த மல்லி விதைகளைத் தூவி விட்டு, அதன் மேல் நீர் தெளித்து விட்டால் போதும். தண்ணீரை ஊற்றக் கூடாது. தெளித்து தான் விட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் போதும். ஒரே வாரத்தில் தளதளவென வளர்ந்து நிற்கும். இதேபோல தான் புதினாவும். புதினாவை நாம் கடைகளில் வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு, அந்த தண்டுப்பகுதியை கீழே தூக்கி எறியாமல் அதை சிறிய தொட்டியில் ஊன்றிவிட்டால் போதும். பிரஷ்ஷான புதினா ஓரிரு நாட்களிலேயே நமக்கு கிடைத்துவிடும்.
0
Leave a Reply