கத்தரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க .....
கத்தரிக்காய் செடி வைத்த45 நாட்களில் பூக்கள் வைக்க தொடங்கும் இந்த பூக்களைஉதிராமல்காய்களாகமாற்றஇந்நேரத்தில்அமிலத்தன்மை நிறைந்த கரைசலை கொடுக்க வேண்டும்.புளித்த மோருடன் தேங்காய் பால் கலந்து கத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும். கரைசலாககத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும்
தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், மோர் பெருங்காயத்தூள் கரைசல் என உங்களிடம் எந்த கரைசல் உள்ளதோ அதனை தெளிக்கலாம்.இவ்வாறு நீங்கள் கத்தரிக்காய் செடி பூக்கள் பூக்கும் நேரத்தில் தெளிப்பதன் மூலம் பூத்த பூக்கள் அனைத்தையும் காய்களாக மாற்றலாம்., காய்கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீரை அதன் வேர்பகுதிகளில் ஊற்றி வேண்டும்.மண்புழு உரத்தினை அதன் வேர்பகுதிக்கு மேல் போட்டு கிளறி விடுவதன் மூலம் கத்தரிக்காய் செடி செழித்து வளரும்.
கத்தரிக்காய் பெரியதாகவும் பூச்சி இல்லாமலும் வளர கடலை புண்ணாக்கு மற்றும் வேப்ப புண்ணாக்கு கலந்த கரைசலை கொடுக்க வேண்டும்முதலில் 5% கடலை புண்ணாக்கு மற்றும்25% வேப்பம் புண்ணாக்கை எடுத்து கொள்ளுங்கள் இதனை ஒரு வாளியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளுங்கள்.இது நன்கு ஊறிய பிறகு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் செடியில் புழுக்கள், எறும்புகள் போன்றவை வராமல் இருக்கும்
0
Leave a Reply