25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


பூசணி சாகுபடி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூசணி சாகுபடி

தமிழர்களின்பாரம்பரியஉணவுமுறைகளில்பயன்படுத்தப்படும்காய்கனிகளில் பூசணி  வகைகளுக்கு தனியிடம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் ஹோட்டல்கள் போன்ற அதிகளவில் உணவுதயாரிக்கும் இடங்களில் பூசணிவகைகளைப் புறந்தள்ள முடியாது.

  • சாம்பல்பூசணியில் கோ 1, கோ 2 ஆகிய ரகங்கள்உள்ளன.
  • நல்லஆழமான இருமண்பாட்டு நிலத்தில்சாம்பல் பூசணி நன்குவளரும்.
  • மானாவாரியில்பயிரிட களிமண் கலந்தநிலம் சிறந்தது.
  • சாம்பல்பூசணியின் வளர்ச்சிக்குஅதிக குளிரில்லாத, ஓரளவுவெப்பமான பருவநிலைமிகவும் உகந்தது.
  • சிறந்தமகசூலுக்கு காரஅமிலத் தன்மை 6.5 – 7.5 இருத்தல் வேண்டும்.
  • ஜனவரி,  ஜூலை மாதங்களில் விதைக்கலாம்.

விதையளவு:

  • ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதைகள் தேவை.
  • விதைக்கும்முன்னர் கிலோ விதைக்கு 2 லிட்டர் தண்ணீர் என்றவிகிதத்தில் அரைமணிநேரம் ஊறவைத்து, 6 நாள்கள்வைத்திருந்து பிறகுவிதைக்க வேண்டும்.
  • நிலத்தை 3 முதல் 4 முறை நன்குஉழுத பின்னர் 2 மீட்டர்இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள நீண்டவாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.
  • இந்தவாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ. நீள, அகல,  ஆழக் குழி பறிக்கவேண்டும்.
  • 2 x 1.5 மீட்டர் (வரிசைக்கு வரிசை 2 மீட்டர் செடிக்குச் செடி 1.5 மீட்டர்) இடைவெளி விட்டுவிதைக்க வேண்டும்.
  • குழிக்கு 3 – 6 விதைகள் நட்டு, முளைத்தவுடன் 3 செடிகளை மட்டும் வைத்துவிட்டுமற்றவற்றை நீக்கவேண்டும்.
  • குழிஒன்றுக்கு 10 கிலோதொழு எரு மற்றும்கலப்பு உரம் (6:12:12) தழை: மணி: சாம்பல்சத்து), 100 கிராம் இட்டுநீர் பாய்ச்ச வேண்டும். 30 நாள்களுக்கு பின்புகுழிக்கு 10 கிராம்யூரியா என்ற அளவில்மேலுரம் இடவேண்டும்.
  • இப்கோகாம்ப்ளக்ஸ், யூரியாபோன்ற உரங்களை வேளாண்துறையினரின் ஆலோசனைப்படிபயன்படுத்தலாம்.

நீர் நிர்வாகம்:

  • பூசணிவிதைகளை விதைக்கும் முன்குழிகளுக்கு நீர்பாய்ச்ச வேண்டும்.
  • விதைத்தஅடுத்த நாள் கண்டிப்பாகநீருற்ற வேண்டும்.
  • பிறகு 3-ம் நாள் உயிர்த்தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  • முளைப்புத்திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம்ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும்.

பின்செய்நேர்த்தி:

  • செடிகளைச்சுற்றி 15 நாள்களுக்கு ஒருமுறைகளைக்கொத்தியால் களையெடுக்கவேண்டும்.
  • கொடிகளைவாய்க்காலில் படரவிடாமல்அவ்வப்போது எடுத்துஇரண்டு வாய்க்கால்களுக்கு இடைப்பட்டநிலப்பரப்பில் படரச்செய்ய வேண்டும்.
  • விளைச்சல்அதிகரிக்க விதைத்த 15 ஆம் நாளில் 10 லிட்டர்நீருக்கு 2.5 மில்லிஎன்ற அளவில் எதிரில்என்னும் வளர்ச்சி ஊக்கியைநான்குமுறை ஒருவார இடைவெளியில் தெளிக்கவேண்டும்.
  • இதனால்கொடிகளில் பெண்பூக்கள் அதிகம் தோன்றி,  அதிகக் காய்கள் பிடித்துவிளைச்சல் அதிகரிக்கும்.

பயிர்ப் பாதுகாப்பு:

  • பூசணியில்வண்டுகளின் தாக்குதலைக்கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி அல்லது டைமெத்தோயேட்ட 1 மில்லி அல்லது மீதைல்டெமட்டான் 1 மில்லிமருந்து இவற்றுள் ஏதேனும்ஒன்றுடன் 1 லிட்டர்தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.
  • பழஈக்களைக் கட்டுப்படுத்தமாலத்தியான் 1 மில்லிமருந்தை 1 லிட்டர் நீரில்கலந்து தெளிக்க வேண்டும்.
  • பழஈ தாக்கப்பட்ட பழங்களைச்சேகரித்து அழிக்கவேண்டும்.  பழ ஈக்களின் தாக்குதல்கோடைக்காலத்தில் குறைவாகவும்,  மழைக்காலங்களில் அதிகமாகவும்காணப்படும். எனவேஇதை அனுசரித்து பயிரிடவேண்டும்.
  • எக்காரணத்தைக்கொண்டும், டிடிசி,  பிஎச்சி, கந்தகம், தாமிரத்தைக்கொண்ட பூச்சி, பூசணக்கொல்லிமருந்துகளைத் தெளிக்கக்கூடாது.
  • இது,  கொடிக்கு ஆபத்தைவிளைவிக்கும். சாம்பல்நோயைக்கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் மருந்தைத் தெளிக்கவேண்டும்.

அறுவடை:

  • காய்கள்முற்றிய நிலையை அவற்றின்மேல் பரப்பில் உருவாகும்சாம்பல்போன்ற பொருள்உதிரத் தொடங்குவதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.
  • விதைத்த 90ஆம் நாளிலிருந்து காய்களைஅறுவடை செய்யலாம்.
  • சாதாரண வெப்ப நிலையில்காய்களை நல்ல காற்றோட்டமானஅறைகளில் ஒன்றின்மேல்ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டுசேமிப்பதன் மூலம் 4முதல் 5 மாதங்கள்வரை பாதுகாக்கலாம்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News