செம்பருத்தி செடி
அனைத்து வீடுகளிலும் செம்பருத்தி செடி வளர்த்து வருவோம். செம்பருத்தி செடி அழகிற்காக மட்டுமில்லாமல் அதில் எண்ணற்ற பயன்களும் உள்ளது. அதாவது, செம்பருத்தி இலையம் பூவும் நம் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. எனவே இந்த செடியை நாம் அதிகமாக வீடுகளில் வளர்த்து வருவோம்.
தேவையான பொருட்கள்:
- வாழை பூ மடல் – 4
- வெல்லம் – 50 கிராம்
- டீ தூள் – 1 ஸ்பூன்
- காஃபி தூள் – 1 ஸ்பூன்
- வாழைப்பழ தோல் – 6
செம்பருத்தி செடியை நடவு செய்யும்போது அதற்கு அடியுரமாக தொழுஉரம் கலந்த மண்கலவையை இட வேண்டும்..செடி நன்றாக வளர்ந்தும் அதிக பூக்கள் பூக்க ஒரு பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் தண்ணீர்எடுத்துகொள்ளுங்கள். அதில் வாழைப்பூ மடல்,1 ஸ்பூன் டீ தூள்,1 ஸ்பூன் காஃபி தூள் மற்றும் வாழைப்பழத் தோல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதனை நன்றாக மூடி 4 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள். 4 நாட்கள் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டி செம்பருத்தி செடிக்கு15 நாட்களுக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் செம்பருத்தி செடி அதிகமாக பூக்க தொடங்கும்.இவ்வாறு செய்து வருவதன் மூலம் பூக்காத செம்பருத்தி செடியிலும் அதிக மொட்டுகள் வைத்து பூக்க தொடங்கும்..
0
Leave a Reply