பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியர்கள்
பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் எல் பிரிவு 2வது போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், பெல்ஜியத்தின் ஜீலியன் கராக்கி மோதினர். இதில் லக்சயா சென் 21-19, 21-14 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார்.
ஒலிம்பிக் துப்பாக்கி சூடுதலில் நான்காவது இடம் பிடித்த, மூன்றாவது இந்தியர் ஆனார். அர்ஜீன். நான்காவது இடம் பிடித்து பதக்க வாயப்பை இழந்தார். ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் டிராப் பிரிவு தகுதிச் சுற்ற நேற்று நடந்தது. தமிழகத்தின் பிரித்விராஜ் வயது 37 பங்கேற்றார். 3-வது சுற்றில் 21 புள்ளி மட்டும் எடுத்தாரர் முதல் நாள் முடிவில் 68 புள்ளி மட்டும் எடுக்க, கடைசி இடத்துக்கு ( 30 வது இடம் ) தள்ளப்பட்டார்.
ஒலிம்பிக்கில் நேற்று ஆண்கள் அணிகளுக்கான வில்வித்தை போட்டி நடந்தது. இந்தியா சார்பில் திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் இடம் பெற்ற அணி பங்கேற்றது. இந்தியா 2-4 நான்காவது முதல் 5 ஆரோவில் சிறப்பாக செயல்பட்டது. கடைசி வாய்ப்பில் திராஜ் 7 புள்ளி மட்டும் எடுக்க, 54-58 என செட்டை இழந்தது. முடிவில் இந்திய அணி 2-6 என தோற்று காலிறுதியுடன் வெளியேறியது.
பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவினல் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, பிரான்சின் மோன்பைல்ஸ், ரோஜர் வாசலின் ஜோடியை 5-7, 2-6, என தோல்வியடைந்து. இதைனையடுத்து சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக போபண்ணா வயது 44, அறிவித்தார்.
0
Leave a Reply