காரட் வளர்க்கும் முறை
நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து விளைய வைக்கும் காய்கறிகள் வரை நச்சுக்களை தான் கலப்படம் செய்கின்றனர். பூச்சிகொல்லி, செயற்கை உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.காய்கறிகளில் மிக முக்கியமானது இந்த கேரட். இந்த கேரட்டை நிறைய பேர்களுக்கு பச்சையாக சாப்பிட பிடிக்கும். ஆனால் செயற்கை உரங்கள் மூலம் விளைவித்த காய்கறிகளை பச்சையாக உட்கொண்டால் கண்டிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இந்த ருசியான கேரட்டை வீட்டிலேயே வளரச் செய்ய நம்மால் முடியும்.
ஒரு தொட்டியில் மண்ணை நிரப்பியோ அல்லது நேரடியாக நிலத்திலோ இதை வளர்க்கலாம். இப்பொழுது கேரட் விதைகளை இந்த மண்ணினுள் வைத்து மூடி விடுங்கள். கேரட் விதைகள் எளிதாக மார்க்கெட்டில் கூட கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு நீங்கள் ரெம்ப பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கேரட் சீக்கிரமாக வளர ஆரம்பித்து விடும். 2-3 நாட்களுக்கு ஒருமுறை என தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த 30 நாட்களில் பாருங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் கண்ணை கவரும் கேரட் ரெடியாகி இருக்கும்..
0
Leave a Reply