25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Jul 22, 2024

மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ், 23.07.2024 அன்று திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூர் மற்றும் நரிக்குடி ஆகிய வட்டாரங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ”கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண  அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்”  முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, 23.07.2024 அன்று திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சாத்தூர் மற்றும் நரிக்குடி வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில், அத்தகுளம் தெய்வேந்திரி  - C.S.I..திருமண மண்டபம், அத்திகுளம் சர்ச் அருகில், அத்தகுளம் தெய்வேந்திரி, கரிசல்குளம், கோட்டைப்பட்டி, அச்சங்குளம், அத்திகுளம் செங்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கும்,வத்திராயிருப்பு வட்டாரத்தில், குன்னூர் - பத்ரகாளியம்மன் திருமண மண்டபத்தில், வலையபட்டி, கல்யாணிபுரம், கீழகோபாலபுரம், ரெங்கநாயக்கன்பட்டி, ராமச்சந்திராபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கும்,சாத்தூர் வட்டாரத்தில், வெங்கடாசலபுரம் - கே.கே.எஸ்.எஸ்.என் ரெட்டியார் மண்டபத்தில், சின்னகாமன்பட்டி, சிந்தபள்ளி, மேட்டமலை, வெங்கடாசலபுரம்,   கத்தாலம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும்,நரிக்குடி வட்டாரத்தில், ஏ.முக்குளம்  - உண்டு உறைவிட பள்ளி வளாகத்தில்,  எழுவாணி, அழகாபுரி, திம்மாபுரம், வி. கரிசல்குளம், புலவாய்க்கரை ஆகிய ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர் முகாம் 23.07.2024 அன்று நடைபெற உள்ளது.மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும்.மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 19, 2024

”மக்களுடன் முதல்வர்” என்ற திட்டத்தின் கீழ்,19.07.2024 விருதுநகர், இராஜபாளையம், திருச்சுழி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,” கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண  அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 19.07.2024 அன்று விருதுநகர், இராஜபாளையம், திருச்சுழி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது.வ.எண் வட்டாரம்1. விருதுநகர்முகாம் நடைபெறும் இடம்கூரைக்குண்டு இராஜரத்தினம் மஹால்முகாமில் கலந்து கொள்ளும் ஊராட்சிகள்1. அழகாபுரி2. மீசலூர்3. தாதம்பட்டி4. கூரைக்குண்டு5. இனாம்ரெட்டியபட்டிவட்டாரம் 2. திருச்சுழிமுகாம் நடைபெறும் இடம்மிதிலைக்குளம் முக்குளத்தூர் துவக்கப்பள்ளி, மிதிலைக்குளம்முகாமில் கலந்து கொள்ளும் ஊராட்சிகள்1. மிதிலைக்குளம்2. குச்சம்பட்டி3. பண்ணைமூன்றடைப்பு4. பள்ளிமடம்5. சென்னிலைக்குடி6. புலிக்குறிச்சி7. உடையனாம்பட்டி8. விடத்தக்குளம்வட்டாரம் 3. இராஜபாளையம்முகாம் நடைபெறும் இடம்தெற்கு வெங்கநல்லூர், M.A. சுப்புராஜ், கோமதியம்மாள் திருமணமண்டபம், வேட்டைப் பெருமாள் கோவில் வளாகம் அருகில்முகாமில் கலந்து கொள்ளும் ஊராட்சிகள்தெற்கு வெங்காநல்லூர்வட்டாரம் 4. வெம்பக்கோட்டைமுகாம் நடைபெறும் இடம்ஆலங்குளம் பி.டி.பி.திருமண மண்டபம், ஆலங்குளம்முகாமில் கலந்து கொள்ளும் ஊராட்சிகள்1. ஆலங்குளம்2. அ.லட்சுமியாபுரம்3. டி.கரிசல்குளம்4. வலையப்பட்டி5. முத்துசாமிபுரம்மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும்.மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 13, 2024

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122-வது பிறந்தநாள் விழா

பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டுமக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜீலை 15 அன்று மகனாகப் பிறந்தார்.எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஆறு வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தவர். ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர்.எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் துவக்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்.பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவகர்லால்நேரு மறைந்த போது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் செயல்பட்டார்.இத்தகைய பெருமைக்குறிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் விருதுநரகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.மேலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகரில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122-வது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், 15.07.2024 அன்று சிறப்பாக நடைபெறவுள்ளது.அன்றைய தினம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள்.மேலும், பொதுமக்கள் அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தவும், இல்லத்தை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Jul 12, 2024

பொது விநியோகத்திட்ட கீழ் -மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கான குறைதீர்வு முகாம்

பொது விநியோகத்திட்ட பயனாளிகளின் நலன்கருதி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பத்து வட்டங்களிலும் மின்னணு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை /நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான குறைதீர்வு முகாம் 2024-ஜீலை-13-ந் தேதி அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.எனவே, இக்குறைதீர்வு முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 09, 2024

ஸ்ரீ ராவ்பகதூர் எ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம்.,முன்னாள் மாணவியர் சந்திப்பு - அழைப்பு

ஸ்ரீ ராவ்பகதூர் எ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்புஅன்புடையீர்,பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பசுமை நிறைந்த நினைவுகளிலே மலர்ந்திட, மகிழ்ச்சியிலே திளைத்திட வருமாறு தங்கள் அனைவரையும் உளமார அழைக்கிறோம்.நாள் : 13 ஜூலை 2024, சனிக்கிழமைநேரம்:(4.00 - 7.00)இடம்:ஸ்ரீ ராவ்பகதூர் எ.கா.த.தர்மராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம்.1947 -2017 ஆம் ஆண்டில் நம் பள்ளியில் படிப்பை முடித்த முன்னாள் மாணவியர் சந்திப்பிற்கு முன்பதிவு செய்து உங்களது வருகையை உறுதி செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.தங்கள் மேலான வருகையை உறுதிசெய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :95975 20845 பதிவு செய்ய வேண்டிய நேரம்: (கீழ்க்கண்ட நேரத்தில் மட்டும் தொடர்பு கொள்ளவும்) காலை 9.30 மணிமுதல் மாலை 4.30 மணிவரைகுறிப்பு-10 ஜூலை 2024க்குள் உங்கள் வருகையை உறுதி செய்யவும்.பதிவு செய்யQR CODE  ஸ்கேன் செய்யவும்இப்படிக்கு, பள்ளி நிர்வாகம்.

Jul 08, 2024

இராஜபாளையத்தில் மின் குறை தீர்க்கும் முகாம்

இராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, இராஜபாளையம், பொன்னகரம், செயற்பொறியாளர் அலுவலத்தில் ஜீலை 9 காலை 11 மணி முதல் 1.00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 

Jul 06, 2024

தியாகச் செம்மல் பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்களின் 126வது பிறந்த நாள் விழா

தியாகச் செம்மல் பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின்126 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீமதி. பி.எஸ்.கே. ருக்மணி அம்மாள் அரங்கத்தில் ஜூலை 8 ஆம் தேதி   சிறப்பாக நடைபெற உள்ளது.திங்கள்கிழமை காலை 9.00 மணிக்குஅமரர் பி.எஸ். குமாரசாமி ராஜாஅவர்கள்நினைவாலயத்தில்ஸ்ரீ பி.ஏ.சி. ராமசாமி ராஜா இசைப்பள்ளிகுழுவினரின் கீர்த்தனாஞ்சலி மற்றும்புஷ்பாஞ்சலி வழிபாடு நடைபெறும்.மாலை 6.00 மணிக்கு காந்தி கலை மன்றம், ஸ்ரீமதி.பி.எஸ்.கே. ருக்மணி அம்மாள் அரங்கத்தில் ராம்கோ குரூப் சேர்மன்திரு. P.R.வெங்கட்ராம ராஜா அவர்கள்(மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)தலைமையில் ,திரு. P.J. ராம்குமார் ராஜா ( டிரஸ்டி. காந்தி கலை மன்றம்)அவர்கள் வரவேற்புரை ஆற்ற ,ஆன்மீகப்பேரொளி, சொல்லின் செல்வர், ஜெயா டிவி புகழ்.புலவர் கோ.சுந்தரராம் M.A., M.Ed., அவர்கள்சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார்.விருந்தினர்களை கௌரவித்தல்திரு. N.K. ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள்திரு. P.R.குமாரசாமி ராஜா அவர்கள்(டிரஸ்டிகள், காந்தி கலை மன்றம்

Jul 04, 2024

திருச்சுழி-அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் நேரடி சேர்க்கையின் தொடக்கம்

திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்காண  மாணவர் நேரடி சேர்ககை 01.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெறுகிறது.இந்நிலையத்தில் பின்வரும் தொழிற்பிரிவுகளில் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA), நில அளவையாளர் (SURVEYOR),  மின்சார பணியாளர் (ELECTRICIAN),  இயந்திர வேலையாள் (MACHINIST),  ஆகிய நான்கு தொழில் பிரிவுகளிலும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்ப்படுத்தி தரப்படும்.விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50/- பயிற்சியின்போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/- கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா  சீருடை(தையற்கூலியுடன்), விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு பள்ளியில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் கூடுதலாக ரூ 1000/- வழங்கப்படும்.எனவே, திருச்சுழி சுற்றுவட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 98421-78028. 70100-40810. 95669-29663 என்ற தொலைபேசி  எண்களை தொடர்பு கொள்ளலாம் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2024

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பெறும் சர்வதேச அல்லது NABCB ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெறப்படும் தர சான்றிதழ் பெற தரச்சான்று மானிய திட்டத்துக்கு விண்ணப்பங்கள்

தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு மாவட்ட தொழில் மையங்கள் மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் மற்றும் மானிய உதவிகளை வழங்கி வருகிறது. தொழில் நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை அதிகரிக்க, சந்தைப்படுத்த மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளைப் பெறவும் பல்வேறு தரச்சான்றுகள் பெற வேண்டி உள்ளது.இவ்வாறாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு பெறும் சர்வதேச அல்லது NABCB ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள் மூலம் பெறப்படும் தர சான்றிதழ் பெற தரச்சான்று மானிய திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.தொழில் நிறுவனங்களுக்கான ‘தரச்சான்று(Q-cert)”  என்ற திட்டம் 2019 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் உற்பத்தி நிறுவனங்கள் ISO 9000, ISO 14001, ISO 22000, HACCP, GHP, BIS, ZED  மற்றும் OEKO-TEX தரச்சான்றிதழ்கள் மற்றும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிற சர்வதேச தரச்சான்றிதழ்கள் பெற்ற தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்.  மேற்கண்ட தரச் சான்றிதழ்கள் பெற செலவழித்த கட்டணத்தொகையில் (பயணச் செலவு, தங்;குமிடம், உணவு மற்றும் கண்காணிப்புச் செலவு தவிர்த்து) 100 சதவீதம் (அதிகபட்சமாக ரூபாய் இரண்டு இலட்சம் வரை) தமிழக அரசினால் மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் NABCB ஆல் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஏதேனும் தரச் சான்றிதழ் பெற்ற குறு சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களும் பயன்பெற தகுதியுடையதாகும். OEKO-TEX  போன்ற பன்னாட்டு தரச்சான்று பெறுபவர்களுக்கு ரூ.10.00 இலட்சம் மானியம் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், விருதுநகர், (தொலைபேசி எண்கள் முறையே : 90800-78933, 99440-90628)  என்ற முகவரியில் அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 03, 2024

கால்நடைத் துறையின் சார்பாக - அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசினால் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான  (250 கோழிகள் / அலகு) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் 3 முதல் 6 பயனாளிகளுக்கு 2024-2025 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.  ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டில் (கோழிகொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு)  50 சதவீத  மானியமாக ரூ.1,56,875/- யை தமிழக அரசு வழங்குகிறது. ( 50 சதவீத பயனாளியின் பங்குத் தொகை ரூ.1,56,875/-)  இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் . ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும் .கோழி கொட்டகை சொந்த செலவில் அமைக்க குறைந்த பட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இடத்தின் சிட்டா / அடங்கல் நகல் இணைக்கப்பட வேண்டும் .  இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும் . கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 2022-23 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளியாக அவரோ அல்லது அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருத்தல் கூடாது. பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும். பயனாளியின் பங்குத் தொகையை, வங்கி கடனாகவோ அல்லது சொந்த முதலீடாகவோ அளிக்க வேண்டும். 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான  ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு / வங்கி கடன் ஒப்புதல் விபரம்  இணைக்கப்பட வேண்டும்)விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.விண்ணப்பங்களை கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் பெற்று பூர்த்தி  செய்து, ஆதார் அட்டை நகல், நில ஆவண நகல்களுடன் 10.07.2024 -க்குள் கால்நடை உதவி மருத்துவரிடமே  சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News