25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Jul 02, 2024

"குருபக்தமணி"ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜாராம்கோ குரூப் அவர்களின்89-வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ்

04-07-2024 வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில் ஸ்ரீமான் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவியர்களின் கீர்த்தனாஞ்சலியும் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.அன்று காலை 7.35 மணிக்கு ஸ்ரீஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த பாரதீ வேதபாடசாலையில் ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் திருஉருவ படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் பிரிவின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் ஜோதி ஏந்தி புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவிலில் பூஜைகள் செய்யப்பெற்று நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து காலை 11 மணியளவில் ராஜபாளையம் மில்ஸ் வந்தடைய உள்ளது.முன்னதாக காலை 8.30 மணியளவில் ராமமந்திரத்திற்கு ஜோதி வருகின்ற சமயம் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பெற்று அனைவருக்கும் காலை 9 மணியளவில் காந்தி கலைமன்ற வளாகத்தில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.   04.07.2024 வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்குஇராஜபாளையம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா அரங்கத்தில்"யுவகலா பாரதி" குமாரி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அனைவரும் கேட்டு மகிழ வருக !

Jul 01, 2024

ROTARY CLUB OF RAJAPALAYAM 2024

ROTARY CLUB OF RAJAPALAYAM INSTALLATION CEREMONYRtn.R.Ananthi  as PresidentRtn.Dr.N.Karthikeyan as SecretaryFor the year 2024-2025On 03.07.2024, Wednesday 6.30pm PRR Rotary Hall, Cotton Market, Rajapalayam.Chief Guest - Rtn. Meeran Khan Saleem District Governor, R.1.Dist. 3212.Special Guest - Rm.Shri.P.R.Venketrama Raja Chairman, Ramco GroupSrimathi P.V. Nirmala Raja Chairperson, Ramco Community ServicesGuest Speaker - Uma Preman APJ Abdul Kalam International Tribal Residential School. AttapadiFelicitation Rts.Gayathri Mariraj  AG ZONE  6 PAG. A.S.P.Arumugaa Selvan Director Sri. Kaleeswari fireworks GroupRts. M.Parthasarathi PresidentRtn. R..Ananthi Secretary

Jun 27, 2024

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், "ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள்" பெற தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய அரசின் சார்பில் பல்வேறு நிகழ்வுகளான நீரில் மூழ்கியவரை காப்பாற்றுதல், மின்சார விபத்துக்கள், விபத்துக்கள், தீ விபத்துக்கள், நிலச்சரிவு, விலங்கு தாக்குதல், சுரங்க மீட்பு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டு மனித உயிர்களை மீட்பவர்களுக்கு கீழ்காணும் பிரிவுகளில் "ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதுகள்" வழங்கி வருகிறது.சர்வோட்டம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ள வரை வீரத்துடன் போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.         உத்தம் ஜீவன் ரக்க்ஷா பதக்கம் துணிச்சலுடன் தாமதமின்றி செயல்பட்டு மிகவும் அபாயகரமான நிலையில் உள்ள வரை போராடி மீட்பவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.ஜீவன் ரக்க்ஷா பதக் தனக்கு காயம் ஏற்பட்டாலும் வீரத்துடன் தாமதமின்றி போராடி உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2024-ஆம் ஆண்டிற்கான ஜீவன் ரக்க்ஷா பதக்க விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்கள் http://awards.gov.in  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து ஆன்லைன் வழியாகவே விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைன் வழியாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 27.06.2024 - மாலை 6.00  மணிக்குள் மூன்று நகல்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Jun 25, 2024

புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள்(Ganesh), Cool Lip,  கள்ளச்சாராயம், போதை பொருட்கள் விற்பனை மற்றும் சட்ட விரோத மதுபான விற்பனை செய்வோர்கள் தொடர்பாக 9042738739 என்ற எண்ணிலும் மற்றும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9443967578 என்ற எண்ணிலும் Whatsapp மூலமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பற்றி விபரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் கட்டணமில்லா தொலைபேசி (Toll free) எண் 10581 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.மேலும் மேற்கண்ட புகார்கள் வரப்பெறும் பட்சத்தில் Cool Lip,  புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன்,  I A S. அவர்கள் எச்சரித்துள்ளார்.

Jun 22, 2024

இராஜபாளையம் ,ராஜூக்கள் சிந்தலப்பாடி தாயாதியர்கள் அறக்கட்டளை வருஷாபிஷேக அழைப்பிதழ்

ஸ்ரீ வலக்கட்டு கருப்பசாமி கோவில் வருஷாபிஷேகம் வரும் ஆனி மாதம் 11-ம் தேதி (25.06.2024) செவ்வாய்கிழமை காலை 9.30 மணிக்குமேல் திருவோண நக்ஷத்திரமும் கூடிய சுபதினத்தில் அபிஷேகம், அலங்காரம் அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற உள்ளது.அன்று அவசியம் தாங்கள் குடும்பசகிதம் கலந்துகொண்டு ஸ்ரீ வலக்கட்டு கருப்பசாமியின் பேரருளை அடைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.தலைவர்எஸ்.ஆர்.ஸ்ரீராம ராஜா 

Jun 18, 2024

சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் முகாம்

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் முகாமானது 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மறுநாள் 20.06.2024 அன்று காலை 9 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 19.06.2024 அன்று காலை 9 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு, சாத்தூர் வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், அரசு அலுவலகங்களும் மற்றும் சேவைகளும், தங்கு தடையின்றி சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, (19.06.2024) மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 6 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.அன்றைய தினம் நடைபெறும் முகாமில், சாத்தூர் வட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு தேவையான சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட இதர சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் ஆதார் பதிவு திருத்தங்கள் மேற்கொள்ளவும் மற்றும் இதர குறைகளுக்கான மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.எனவே, சாத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Jun 18, 2024

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் இருந்த காலத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகைகள்

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் இருந்தகாலத்தில்விருதுநகர்மாவட்டத்தில்ஏற்பட்டபட்டாசுவிபத்துகளில்உயிரிழந்தவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால்  நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது.அதன்படி, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளால் வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகை தலா மூன்று இலட்சம் ரூபாய்  (18.06.2024) பயனாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Jun 12, 2024

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் , இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம்

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், 2023 - 2024ம் ஆண்டு  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் / இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 13.06.2024 அன்று  காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளிகளில் இருந்து கல்லூரிகளுக்கு மாறுவது ஒவ்வொரு மாணாக்கர்களின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான கனவாகும். மேலும், உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கல்விக் கடன்கள், உதவித்தொகை, கல்லூரியை அணுகுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை போன்ற குறைகளை நிவர்த்தி செய்து மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டிட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது மாணவர்களின் எதிர்கால கனவான உயர்கல்வியை அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, உயர்கல்வியில் சேர இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S  அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்

Jun 11, 2024

Neet தேர்வில் 720/720 பெற்ற எம்.ஜெயதி பூர்வஜா மாணவிக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கி பாராட்டு

திருவண்ணாமலையை சேர்ந்த எம்.ஜெயதி பூர்வஜா என்ற மாணவி 720/720 பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்பாலசுப்பிரமணியம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, அவரது கடின உழைப்பிற்குப் பாராட்டு தெரிவிக்கும் விதமாக, ஸ்டெதஸ்கோப் ஒன்றைப் பரிசாக வழங்கி கௌரவித்தார் .

Jun 08, 2024

இறுதிஊர்வலத்தின்போது சாலைகளில் மலர் மாலைகளை வீசினால் கடும் நடவடிக்கை

இறுதி ஊர்வலத்தின்போது சாலைகளில் மலர் மாலைகள் மற்றும் மலர் வளையங்களை வீசுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுடி.ஜி.பி.,சுற்றறிக்கைஅனுப்பியுள்ளதாகசென்னைஉயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.பண்ருட்டியில் இறுதி ஊர்வலத்தில் சாலையில் வீசப்பட்ட மலர் மாலைகளால் பைக்கில் சென்றவர் வழுக்கி விழுந்து உயிரிழந்தது குறித்து அன்புச்செல்வன் என்பவர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினார்.இந்தக் கடிதத்தை மனுவாகக் கருதி, தாமாக முன்வந்து வழக்கை தலைமை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனைத்து காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு டி.ஜி.பி. அனுப்பியுள்ள சுற்றறிக்கை தாக்கல் செய்ப்பட்டது. அதில், இறுதி ஊர்வலத்தின்போது, அதிக அளவில் மாலைகள், மலர்வளையங்களை கொண்டுச் செல்லக்கூடாது என்றும்,சாலைகளில் வீசப்பட்டால், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலை,பிரதான சாலைகள், உயர்மட்ட பாலங்களில் இறுதி ஊர்வலம் செல்வதை உறவினர்கள் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிபந்தனைகளை மீறினால், சம்பந்தப்பட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுடி.ஜி.பிசுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சுற்றறிக்கை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News