25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தேசிய கோபால ரத்ன விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய கோபால ரத்ன விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

கிராமப் பொருளாதாரத்திலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதிலும் கால்நடை பராமரிப்புத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மழை பொய்த்து போகின்ற காலங்களில் கால்நடைகளை நம்பியே விவசாயிகள் வருமானத்தை ஈட்டிக்கொள்ள ஏதுவாக அமைகிறது.  ஆகையினால் ஒன்றிய அரசானது பல்வேறு திட்டங்களை தீட்டி குறிப்பாக தேசிய கால்நடை இயக்கத்தின் மூலம் கால்நடைகளுக்கு காப்பீடு, தேசிய செயற்கைமுறை கருவூட்டல் பணி திட்டம் மற்றும் கால்நடை தொழில் சார்ந்த தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் ஆகியவற்றை மானியத்துடன் விவசாயிகளின் பங்களிப்போடு செயல்படுத்தி வருகிறது.
மேலும், தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் அனைத்து கால்நடைகளுக்கும் இலவசமாக காலத்திய தடுப்பூசிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பால் உற்பத்தி செய்யவும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்யவும் பல்வேறு இணையதளங்கள் மூலம் பதிவு செய்து விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். ஆகையினால் முன்னோடி விவசாயிகள், செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்கள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கங்கள் தேசிய அளவில் சிறப்பாக செயல்பாட்டில் இருக்கிறவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்க ராஷ்ட்ரிய கோகுல் இயக்கம் மூலம் ஒன்றிய அரசின் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதலாவதாக முன்னோடி விவசாயிகள் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு  50 பசுவினம் மற்றும் 17 எருமை இனங்களில் ஒன்றினை பராமரித்து நல்ல முறையில் கால்நடை செல்வத்தை பெருக்கி சிறப்பாக பண்ணை தொழிலை மேற்கொள்ளும் விவசாயிக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.  
அடுத்ததாக கால்நடைகளுக்கு செயற்கைமுறை கருவூட்டல் பணியினை மேற்கொண்டு சிறப்பாக கிராமங்களில் பணிபுரிந்து அரசின் திட்டங்களில் பங்கேற்று மக்களுக்கு அதனை கொண்டு சென்ற விதத்தில் சிறப்பாக பணிபுரியும் 90 நாட்கள் பயிற்சி பெற்ற செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.  
அடுத்ததாக சிறப்பாக செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் குறைந்தது ஒரு நாளைக்கு 100 லிட்டர் பால் சேகரிப்புடன் 50 உறுப்பினர்கள் உள்ளடக்கியதோடு அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் செவ்வனே செயல்பட்டு கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும்படியாக இயங்கி வரும் சங்கங்களுக்கு தேசிய அளவில் விருது வழங்கப்பட இருக்கிறது.
இந்த விருதின் பெயர் தேசிய கோபால் ரத்னா விருது ஆகும்.  இவ்விருது தேசிய பால் தினமான நவம்பர் 26 அன்று ஒன்றிய அரசால் வழங்கப்படும். இவ்விருதில் சான்றிதழ், மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக 5 இலட்சம், இரண்டாவது பரிசாக 3 இலட்சம், மூன்றவாது பரிசாக 2 இலட்சம் ரொக்கத்தொகை தேர்வு செய்யப்பட்ட மூன்று இனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.   விண்ணப்பதாரர்கள் ஒன்றிய அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் இணையதளத்தில் (https://awards.gov.in/Home/Awardpedia?MinistryId=DO23&OnGoingAwards=1& ptype=Phttps://awards.gov.in/Home/AwardLibrary) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பிக்க செப்டம்பர் 2023,  15 ஆம் தேதி  இறுதி நாளாகும்.
சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு சிறந்த விவசாயி, சிறந்த செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர் மற்றும் சிறப்பாக செயல்படும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு அதற்குரிய விருது வழங்கப்பட இருப்பதால் தகுதியான நிறுவனம் மற்றும் விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
இவ்விருது தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்படின் இராசபாளையத்திலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் விருதுநகரிலுள்ள கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I AS.,அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News