வால்பாறைபொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு
தமிழகத்தில் மக்கள் அரசு பேருந்துகளில் மக்கள் அதிகமாக பயணம் செய்கின்றனர். ஆனால் ஒரு சில பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அதனால் ஏழை மக்கள் சிரமத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு பெண்களுக்கு இலவசமாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்தும் அது பல இடங்களுக்கு பொருந்தவில்லை. அந்த வகையில் வால்பாறைபொள்ளாச்சி இடையே இயக்கப்படும் அரசு பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதாவது வால்பாறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பொள்ளாச்சி, கோவை, பழனி, திருப்பூர், சேலம் மற்றும் கேரள மாநிலம் மன்னார்காடு ஆகிய வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ரூ.64 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது ரூ. 48 கட்டணமாக வசூலிக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதனால் பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
0
Leave a Reply