அதிகரித்து வரும் ரயில் பயணிகளிடம் டிக்கெட் முன்பதிவு தொடர்பான மோசடிகள்
நாடு முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவையாக ரயில் சேவை உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிடைக்கும் பயணம் என்பதால் மக்கள் ரயில் போக்குவரத்தை அதிகம் விரும்பி வருகின்றனர். இந்நிலையில் சமீப காலமாக ரயில் டிக்கெட் முன்பதிவில் போலி செயலிகள் மூலம் அதிகளவு மோசடிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் ஐஆர்சிடிசி செயலி அல்லது அதன் வெப் சைட்டில் டிக்கெட்டுகளை புக் செய்வார்கள். இந்நிலையில் ஐஆர்சிடிசியில் தளத்தின் பெயரில் போலியாக எஸ்எம்எஸ்களில் சில ஃபிஷிங் இணைப்புகளை கொடுத்து பயணிகளிடம் பெருமளவில் பண மோசடி நடைபெறுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து தனது அதிகாரப்பூர்வ ரயில் கனெக்ட் மொபைல் செயலிகளை பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்களுக்கு ஐஆர்சிடிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஐஆர்சிடிசியில் இருந்து அனுப்பப்படுவதாக வரும் போலி எஸ்எம்எஸ்களில் உள்ள லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம் என்றும் ஐஆர்சிடிசி கோரிக்கை விடுத்துள்ளது.போலி செயலிகளின் மூலம் பயணிகள் மோசடிக்கு ஆளானால் உடனடியாகCare@irctc.co.in என்ற இ மெயில் முகவரிக்கு உடனடியாக புகார் அளிக்குமாறும் இந்தியன் ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது செயலிகள் சரியானதுதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இந்தியன் ரயில்வே எச்சரித்துள்ளது.அதிகாரப்பூர்வ செயலிகளை தவிர மற்ற இணையத்தில் கிடைக்கும் செயலிகளை நம்ப வேண்டாம் என்றும் இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. ஆன் லைன் பண மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஐஆர்சிடிசி பெயரிலும் போலி புழக்கத்தில் இருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
0
Leave a Reply