விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காசநோய் கருத்தரங்கு
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் (15.07.2024) காசநோய் கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன். I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்திய அரசின் புள்ளி விவரப்படி லட்சத்திற்கு 200 நபர்கள் காசநோயால் (வுரடிநசஉரடழளளை ) பாதிப்படைகின்றனர். நமது மாவட்டத்தில் சுமார் 2100 நபர்கள் தற்போது காசநோய்க்கான சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். வட்டார அளவில் பொதுமக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்வினை ஏற்படுத்தி, விடுபட்ட நபர்களை தகுந்த பரிசோதனை மூலம் கண்டறிந்து தகுந்த சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும், தொழில்நுட்ப வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம், தொழில்துறை நடவடிக்கைகள், வாகன பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், காற்று மாசுபாடு ஏற்பட்டு, பொது மக்களுக்கு நுரையீரல் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அதை திறம்பட கையாளுவதற்கு இது போன்ற கருத்தரங்குகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும்.
நமது மாவட்டத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை குறைப்பதற்கும் இது போன்ற கருத்தரங்குகள் தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கும் மற்றும் செவிலியர்களுக்கும் நடத்தப்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கருத்தரங்கில் இணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.பாபுஜி, முதல்வர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மரு.சீதாலெட்சுமி, மாவட்ட சுகாதார அலுவலர் (விருதுநகர்) மரு.யசோதாமணி, சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கலுசிவலிங்கம், துணை இயக்குநர் (குடும்பநலம்) மரு.விமலா, துணை இயக்குநர் (காசம்), துணை இயக்குநர் (தொழுநோய்) மற்றும் மருத்துவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply