தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் மாணவ / மாணவியர்களுக்கு கோடைகால பயிற்சி முகாம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் நடத்தப்படும் 2023ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் விருதுநகர் மாவட்டத்தில் 15 நாட்கள் அனைத்து மாணவ /மாணவியர்களுக்கும், வரும் 01.05.2023 முதல் 15.05.2023 வரை காலை 6.30 முதல் 9.00 மணி வரை மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, மற்றும் வாலிபால், போன்ற விளையாட்டுகளில் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முகாமில் சிற்றுண்டி வழங்கப்படும். பயிற்சி முகாமின் முடிவில் சீருடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி மாணவ /மாணவியர் இப்பயிற்சி முகாமில் சேர்ந்து தங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
0
Leave a Reply