அயோத்தி ராமர் கோயிலில் ,ராமரின் நெற்றியில், சூரிய ஒளிக்கதிர் பட்டு சூரிய திலகம் எனப்படும் அரிய நிகழ்வு
அயோத்தி ராமர் கோயிலில், ராம நவமி தினமான ஏப்ரல் 17ஆம் தேதி, ராமரின் நெற்றியில், சூரிய ஒளிக்கதிர் பட்டு சூரிய திலகம் எனப்படும் நிகழ்வு நடந்தேறவிருக்கிறது.
அறிவியல், கட்டடவியல் அனைத்தும் ஒன்றிணைத்து, ஆன்மிகச் சிந்தனையை அதிகரிக்கும் வகையில், ராம நவமி நாளில் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு, காணக் கிடைக்காத இந்த சூரிய திலக தரிசனம் கிடைக்கவிருக்கிறது.
ஆன்மிக ரீதியாகவும், அதே வேளையில், அறிவியலுடன், கட்டட அமைப்பும் ஒருங்கிணைந்து, கோயில் அறக்கட்டளையுடன் விஞ்ஞானிகள் இணைந்து, ராமரின் பிறந்தநாளைக் கொண்டாடும் ராமநவமி நாளில் மட்டும் சூரிய ஒளிக்கதிர் ராமரின் நெற்றியில் திலகம் போல படுமாறு கண்ணாடிகள், லென்ஸ்கள் கொண்ட வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
வட இந்தியர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராமநவமி, ஏப்ரல் 17ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய நாள் சூரிய ஒளிக்கதிர், அயோத்தி ராமர் கோயிலில் உள்ள கருவறைக்குள் வீற்றிருக்கும் பால ராமர்மீதுநான்குநிமிடங்கள்விழும்வகையில்வடிவமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனின் பாதையை துல்லியமாகக் கணித்து, அன்றைய நாள், எந்த இடத்தில் சூரியன் பயணிக்கும் என்பதை கண்டறிந்து, இந்த செயல்முறை அமைக்கப்பட்டிருப்பதாகவும், மூன்றாவது தளத்திலிருந்து சூரிய ஒளிக்கதிர், கருவறைக்குள் இருக்கும் பால ராமர் மீது விழும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம்.மிகச் சரியாக பாலராமரின் நெற்றியில் திலகம் போல சூரிய ஒளிக்கதிர் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..
0
Leave a Reply