மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், கோடைகால பயிற்சி வகுப்பு முகாம்களில் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும், பள்ளி மாணவர்களுக்கான, ஒன்றிய அளவிலான கோடைகால பயிற்சி முகாம் அந்தந்த வட்டார வள மையத்தில் வைத்து, நடைபெற உள்ளது.
அதன்படி, 01.05.2024 அன்று ஓவியக் கலைகள் பயில்வோம் என்ற தலைப்பிலும், 02.05.2024 அன்று தனித்தமிழ் அறிவோம் என்ற தலைப்பிலும், 03.05.2024 அன்று விருதுநகர் மாவட்டம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பிலும், 04.05.2024 போஸ்டர் தயாரித்தல் இணைய வழி பயிற்சியும், 06.05.2024 அன்று கதை சொல்லி என்ற தலைப்பிலும், 07.05.2024 அன்று புத்தகம் பேசுதல் என்ற தலைப்பிலும், 08.05.2024 அன்று நாட்டுப்புற கலைகள் பயிற்சியும், 09.05.2024 அன்று உணவே மருந்து என்ற தலைப்பிலும், 10.05.2024 அன்று உபயோகமற்ற பொருட்களில் இருந்து கலை பொருட்கள் தயாரித்தல்(Art from Waste) என்ற தலைப்பிலும், 11.05.2024 அன்று மெகந்தி வரைதல் மற்றும் களிமண் பொருட்கள் தயாரித்தல்(Mehendi and clay Modelling) என்ற தலைப்பிலும் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம்களில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 50 மாணவர்கள் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள இயலும். ஒரு மாணவர் இரண்டு பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்க பதிவு செய்யலாம்.இந்த கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்ற விரும்பும் மாணவர்கள் 30.4.2024- க்கு முன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பயிற்சி முகாம் முற்றிலும் கட்டணமில்லா பயிற்சியாகும். மதிய உணவு வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 98437- 21133 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply