25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


Malpua ‘மால்புவா ஸ்வீட்’
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

Malpua ‘மால்புவா ஸ்வீட்’

மால்புவா இனிப்பு வகை கிழக்கு இந்தியாவிலிருந்து தோன்றியதாகும். பூட்டான், இந்தியா, நேபாள், பங்களாதேஷ் போன்ற இடங்களில் இந்த இனிப்பு மிகவும் பிரபலமாகும். காலையில் பிரேக் பாஸ்டாக டீயுடன் சேர்த்து சாப்பிடலாம், அல்லது சாதாரணமாக இனிப்பு வகையாகவும் உண்ணலாம். இது மிகவும் பழமையான இனிப்பு வகை என்று கூறப்படுகிறது. ஹோலி, ஜென்மாஸ்டமி போன்ற விஷேச நாட்களில் இதை செய்வார்கள். 

மால்புவா செய்ய தேவையான பொருட்கள்:

  • மைதா -1 கப்.
  • ரவை -1/4கப்.
  • மில்க் பவுடர் -1/2கப்
  • பால் -1/2 கப்.
  • ஏலக்காய் பொடி - தேவையான அளவு.
  • சக்கரை - 1கப்.
  • குங்குமப்பூ - சிறிதளவு.
  • நெய் - தேவையான அளவு.

மால்புவா செய்முறை விளக்கம்:

முதலில் ஒரு பாத்திரத்தில்1 கப் மைதா, ரவை¼ கப், மில்க் பவுடர்½ கப், ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்து பால் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு நன்றாக கலக்கி20 நிமிடம் மூடி வைத்து விடவும்.இப்போது இன்னொரு பாத்திரத்தில்½ கப் சக்கரை, தண்ணீர்½ கப் சேர்த்து நன்றாக சக்கரை கரையும் வரை கிண்டவும். அதில் சிறிதளவு ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.இப்போது அடுப்பில் பேன் வைத்து அதில் நெய்யை ஊற்றிக்கொள்ளவும். ஊற வைத்திருக்கும் மாவை குழிக்கரண்டியில் எடுத்து சிறிதாக ஊற்றி, நன்றாக மாவு பொன்னிறமாக மாறும் வரை வைத்து இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும். பார்ப்பதற்கு பூரி போல இருக்கும். இப்போது இதை செய்து வைத்திருக்கும் சக்கரை பாகில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.கடைசியாக ஒரு தட்டில் ஊற வைத்த ஸ்வீட்டை அடுக்கி அதன் மீது பொடியாக வெட்டி வைத்த பிஸ்தாவை தூவி பரிமாறவும். அவ்வளவு தான் சுவையான மால்புவா தயார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News