தேவையான பொருட்கள்: - இளம் நுங்குகள் – 10 , பால் -2 cup , ஜீனி சுவைக்கேற்பசெய்முறை- இளம் நுங்குகள் எடுத்து அதன் தோலை எடுத்து துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் பரத்தி வைத்து ஆறிய பாலுடன் ஜீனி சுவைக்கேற்ப சேர்த்து ஊற்றி பிரிட்ஜில் வைத்து2 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் ரொம்ப சுவையாக இருக்கும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.கோடை உஷ்ணத்தை தணிக்க நுங்கு மிகவும் சிறந்தது. அதிலிருந்து எடுக்கப்படும் பதநீர் உடல் சூட்டை வெகுவாகத் தணித்து உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கும். கோடைக்காலத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலை உடலுக்குத் தரும்
.தேவையான பொருட்கள்1கப் அரிசி2 டம்ளர் பால் 2 ஸ்பூன் தயிர்தேவையானஅளவு உப்பு 1 கப் மாதுளம் பழம் 2 ஸ்பூன் திராட்சை2 பேரிச்சம்பழம்2 வெங்காயம்1 கொத்து கருவேப்பிலை1 கொத்து கொத்தமல்லி தழைஒருகப் அரிசிக்கு4 கப்தண்ணி ஊத்தி ,அரிசியை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். சாதம் நன்றாக ஆறியவுடன்,பால்சேர்த்து மத்தினால் நன்றாக கடைந்து, பிசைந்து பால் சேர்க்கவும், தாளிக்க-கடுகு பெருங்காயம்,வெங்காயம், இதைமட்டும் தாளித்துகூட கருவேப்பிலையும்கொத்தமல்லியும் சாதத்தில்கொட்டவும். தேவையானஅளவு உப்புபோட்டு, இரண்டுஸ்பூன் தயிர்சேர்த்து நன்றாகபிசைந்து.மாதுளம் பழம்,திராட்சை, பேரிச்சம்பழம்நறுக்கியது, அனைத்தையும்எடுத்து,தயிர் சாதத்தில்கலந்து,பிரிட்ஜில் வைத்து2 மணி நேரம் கழித்து பரிமாறவும்
தேவையான பொருட்கள் - நிலக்கடலை 1 கைப்பிடி அளவு, வாழைப்பழம் 1, பேரீட்சைப்பழம் 5 எண்ணிக்கை, தேன் சிறிதளவு, முந்திரி தேவையான அளவு, தேங்காய் துருவல் 3 ஸ்பூன்.செய்முறை - நிலக்கடலையை 6 மணி நேரம் ஊற வைத்து, சுத்தமாக கழுவி அதனுடன் வாழைப்பழம், பேரீச்சம்பழம், தேன். உடைத்த முந்திரி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ,மிக்ஸியில் அரைத்தால்,சத்தானமிக்ஸ்ரெடி.ஆப்பிளுக்குபதிலாகசப்போட்டா,மாம்பழம்,கொய்யா,சேர்த்துக்கொள்ளலாம்.வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பசி அடங்கும். புத்துணர்ச்சி தரும்.
தேவையான பொருட்கள் - பேரீட்சைப்பழம் 50 கிராம், தேங்காய் பால் 1 டம்ளர், ஐஸ் சிறிதளவு, ஆப்பிள் ஒன்று.செய்முறை - கொட்டை நீக்கிய பேரீச்சை, ஆப்பிள் இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.பின்னர் தேங்காய் பால் சேர்த்து, நுரை பொங்க மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். விரும்பினால் ஐஸ் கட்டி சேர்த்து குடிக்கலாம்.பேரீட்சை இரும்புச் சத்து நிறைந்துள்ளதால் இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸ் செய்து பருகலாம். அனைத்து வயதினருக்கும் இது மிகச் சிறந்தது.
தேவையானவை - கொய்யாபழம் 130 கிராம் (வெட்டி விதை நீக்கியது),மாதுளை பழம் 250 கிராம்(வெட்டிஉதிர்க்கவும்) ,நன்னாரி சர்பத் தேவைக்குசெய்முறை - உதிர்த்தெடுத்த மாதுளம் விதைகளுடன் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிக்ஸியில் அரைத்து, அதனுடன் கொய்யாபழத்தை சேர்த்து அரைக்கவும். இதனுடன் சுவைக்கேற்ப நன்னாரி சேர்த்து பரிமாறலாம். மலச்சிக்கல், சளி, இருமல் ஆகியவற்றை தடுக்கும்.
தேவையான பொருட்கள் - காரட் கால் கிலோ, பேரிக்காய் 2 எண்ணிக்கை, தேன் தேவைக்கேற்ப.செய்முறை - ஜூஸரில் காரட் மற்றும் பேரிக்காயைச் சாறு எடுத்து, தேன் கலந்து சாப்பிட்டால், வேறு எந்த ஜூஸ் பக்கமும் போக மாட்டீர்கள்.ஜூஸர் இல்லாதவர்கள் மிக்ஸியில் அரைத்து வடிகட்டியும் ஜூஸ் எடுக்கலாம்.
தேவையான பொருட்கள் - தயிர் 2 கப், உப்பு சிறிதளவு, பச்சை மிளகாய் 1 சிறியது, சின்ன வெங்காயம் 3, இஞ்சி 1 இஞ்ச், கருவேப்பிலை சிறிதளவு, மல்லி இலை சிறிதளவு, பெருங்காயப்பொடி கால் டீஸ்பூன், சீரகப் பொடி கால் டீஸ்பூன், ஜீனி 3 டீஸ்பூன், தண்ணீர் 3 கப்,செய்முறை - தயிரை தவிர்த்து மீதி அனைத்தையும் ,ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். பின் தயிர் சேர்த்து நன்றாக அடித்துக் கொண்டு, தண்ணீர் சேர்த்து வடிகட்டி ,பிரிட்ஜில் வைத்து ஜில் ஆனவுடன் எடுத்துக் குடியுங்கள். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் -காரட் 6 தோல் சீவி துருவியது, மாதுளை 2 வெட்டி உதிர்த்தது. தேன் ¼டீஸ்பூன்.செய்முறை -ஜுஸர் அல்லது மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பரிமாறலாம். இந்த ஜீஸ் குடித்தால் இரத்தம் விருத்தியாகும். கண் பார்வை கூர்மையாகும் இது ஒரு உற்சாக டானிக் வயதானவர்கள் வாரம் மூன்று முறை இந்த ஜூஸ் பருகலாம்.
தேவையான பொருட்கள்- நன்னாரி வேர் ½ தேக்கரண்டி நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும், எலுமிச்சை 1 பழம், பனஞ்சர்க்கரை அல்லது சர்க்கரை தேவையான அளவு.செய்முறை- 2 டம்ளர் நீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை சாறு சேர்த்து பனஞ்சர்க்கரை அல்லது சர்க்கரை சேர்த்துப் பருகலாம். வெயில் காலத்தில் அடிக்கடி பருகலாம்.
தேவையான பொருட்கள்- வாழைத்தண்டு 1 கப், எடுத்து சிறிதாக நறுக்கியது. தயிர் ¼கப் இஞ்சி 1 இன்ச் கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப.செய்முறை -அனைத்து பொருட்களையும் அரைத்து வடிகட்டி சிறிதளவு உப்பு போட்டு பரிமாறலாம். நார்ச்சத்து நிறைந்தது. மலம் நன்றாகக் கழியும். சிறுநீரகத்தில் கல் இருப்பவர்களுக்கு சிறந்தது.