தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய்- தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.ரசத்துக்கு: பருப்பு தண்ணீர் - 2 கப், புளித் தண்ணீர் - அரை கப், தக்காளி சாறு (வடிகட்டியது) - அரை கப், பழுத்த தக்காளி 1, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, பெருங்காயம் - அரை டீஸ்பூன்.பொடிக்க: மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிது. - தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன்.செய்முறை:- உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, மெத்தென்று ஆட்டுங்கள். அவ்வப்பொழுது தண்ணீர் தெளித்து கெட்டியாக ஆட்டி, உப்பு சேர்த்து கலந்து எடுங்கள். பருப்பு தண்ணீருடன் புளி தண்ணீர், தக்காளி சாறு, பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம், பொடித்த பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நெய்யில் கடுகு தாளித்து. ரசக் கரைசலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லி சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு வடைகளாக தட்டி போட்டு, வெந்ததும் எடுத்து ரசத்தில் போட்டு சூடாக பரிமாறுங்கள். (பொடித்த பொடியை புளித் தண்ணீரில் சேர்க்காமல் பாத்திரத்தில் போட்டு, அதில் ரசத்தை இறக்கி ஊற்றினாலும் நன்றாக இருக்கும்).
தேவையான பொருட்கள் - உளுத்தம்பருப்பு - அரை கப், உப்பு - தேவைக்கு. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப்,. பொடியாக நறுக்கிய மல்லித்தழை - கால் கப், எண்ணெய் - தேவையான அளவு. சாம்பாருக்கு: துவரம்பருப்பு - அரை கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் 1. தக்காளி - 3, புளி - நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிதளவு. உப்பு ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு அரை டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன். வறுத்துப் பொடிக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, வெந்தயம் - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன்.செய்முறை:-உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிடுங்கள்.துவரம்பருப்பை. மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வேகவிடுங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ளவற்றை பொன்னிறமாக வறுத்துப் பொடியுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து கடுகு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும். தக்காளியையும் சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு வதக்குங்கள். தக்காளி கரைந்து வதங்கியதும் புளித்தண்ணீரை சேருங்கள். அதில் உப்பு, பெருங் காயம். கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.பிறகு. துவரம்பருப்பைக் கரைத்து ஊற்றுங்கள். வறுத்துப் பொடித்த பொடியைப் போடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மல்லித்தழை சேருங்கள். உளுத்தம்பருப்பை சிறிது தண்ணீர் தெளித்து. சிறிது உப்பு சேர்த்து மெத்தென்று ஆட்டிக்கொள்ளுங்கள்.சாம்பாரில் இருந்து கால்பகுதி அளவு எடுத்து, அதனுடன் அரை கப் கொதிக்கும் தண்ணீரை சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து ஆட்டிவைத்துள்ள மாவை, சிறு சிறு வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிற மானதும் எடுத்து, சாம்பார் கலவையில் போடுங்கள். 5 நிமிடம் ஊறியதும் எடுத்து. ஒரு டிரேயில் அடுக்கிக் கொள்ளுங்கள். எல்லா மாவையும் இதே போல செய்யுங்கள். பரிமாறும்பொழுது. சாம்பாரை வடைகள் மேல் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்..
தேவையான பொருட்கள்-பலவகையான பழங்கள் - 300கிராம்எலுமிச்சம் பழச்சாறு - தேவைக்கேற்பசர்க்கரை - 150கிராம், சோள மாவு - 3 மேசைக்கரண்டிசெய்முறை-பழங்களை ஐந்து கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும் பழங்கள் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.. பிறகு சர்க்கரையைச் சேர்த்து வேக வைக்க வேண்டும்.அடுப்பிலிருந்து இறக்கி நீரை மட்டும் வடிகட்டி விட்டு, வெந்த பழங்களைக் கையினால் பிழிந்து விட வேண்டும். இதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைக்க வேண்டும்.சிறிது தண்ணீரில் மக்காச் சோளமாவைக் கொட்டிக் கிளறி ,சேர்த்துக் கொள்ள வேண்டும் இக்கலவையை மூன்று நிமிட நேரம் கரண்டியால் நன்றாகக் கிளறி வேகவைத்து இறக்கி விட வேண்டும். சிறிது ஆறவிட்டு அருந்தினால் சுவையாக இருக்கும்.
சுண்டக்காய் பித்தக் கோளாறுகள் அகற்றும், இரத்த ஓட்டத்தைச் செம்மைப்படுத்தும். வயிற்றிலுள்ள கீரைப் பூச்சிகளை அழித்து குடலைச் சுத்தப்படுத்தும்.தேவையான பொருட்கள்பச்சை சுண்டைக்காய் - 20கிராம்லவங்கப்பட்டை-1, லவங்கம் -1,பெரிய வெங்காயம் - 4, பெரிய தக்காளி - 2, பால் - 200மி.லி,தேங்காய்ப்பால் -100மி.லி, மிளகு - 5கிராம், நெய் - ஒரு மேசைக்கரண்டு, உப்பு - தேவைக்கேற்பபயத்தம் பருப்பு - 25 கிராம் செய்முறை தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது நெய்விட்டு அடுப்பில் வைக்கவும். அது காய்ந்ததும் சுண்டைக்காய்களைப் போடவும் இலேசாக வதக்கியதும் இறககி தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு லிட்டர் தண்ணீர் விடவும் தண்ணீர் சூடானதும் பருப்பைப் போடவும் பருப்பு வெந்ததும் சுண்டக்காய்களைப் போடவும். காயும் பருப்பும் கரைந்து போகும் அளவு கொதிக்க விடவும் தண்ணீர் பாதியாகச் சுண்டியதும் இறக்கவிடவும்வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய்யை விடவும் நெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவந்து வந்ததும் லவங்கப்பட்டையைப் போட்டு ஒரு புரட்டு புரட்டி, வேக வைத்த சுண்டைக்காய் பால், தேங்காய்ப் பால் ஆகிய அனைத்தையும் விட்டு ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைக்கவும்உப்பு, மிளகு இரண்டையும் பொடி செய்து போட்டுக் கலக்கி ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து தெளிவாக வடிகட்டி சூடாக அருந்தவும்.
தமிழ் மக்களுக்கு அறிமுகமான கீரை வகைகளில் அரைக்கீரை ஒன்று, அரைக்கீரையில் 87 சதவிகிதம் நீர் உள்ளது. 8 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது மற்றும் 0.4 சதவிகிதம் கொழுப்புச்சத்தும், 2.4 சதவிகிதம் தாது உப்புகளும் உள்ளன. 100 கிராம் கீரையில் 364 மி.கிராம் சுண்ணாம்புச் சத்தும், 38.5 கிராம் புரதச் சத்தும் உள்ளன.சித்த மருத்துவத்தில் இந்தக் கீரை முக்கியமான ஒரு மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், ஜன்னி, கபரோகம், வாத நோய்கள் ஆகிய நோய்களைக் குணமாக்கும். தாது விருத்திக்கு இது சிறந்தது.தேவையான பொருட்கள்-அரைக்கீரை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடியளவுவெங்காயம் (பொடியாக நறுக்கியது) -1 கொத்தமல்லிப் பொடி - அரை தேக்கரண்டி தக்காளிப்பழம் (பொடியாக நறுக்கியது) 2 எலுமிச்சம் பழச்சாறு - 2தேக்கரண்டி மிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்ப பயத்தம் பருப்பு - 50கிராம் வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி சீரகப்பொடி - அரை தேக்கரண்டி பூண்டு 2 பற்கள், தண்ணீர் 500 மி. லி செய்முறை-தண்ணீர் விட்டு பயத்தம்பருப்பைக் குழைய வேக வைத்து சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டிக் கொள்ள வேண்டும் வெங்காயத்தையும் பூண்டும் நெய்விட்டு வதக்கிக் கொள்ள வேண்டும். அதில் சீரகப்பொடி, கொத்தமல்லிப் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப்பழம் ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும் உப்பு, மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு எலுமிச்சம்பழச்சாற்றைச் சேர்க்க வேண்டும்.நன்கு வதக்கிய வெங்காயம். எலுமிச்சம் பழத்துண்டுகளோடு பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்-ஆப்பிள் - 4 சர்க்கரை - 4 தேக்கரண்டி லவங்கப்பட்டை - 2துண்டுகள் கிரீம் - அரை கோப்பை, தண்ணீர் - 500மி.லி தேன் - 1மேசைக்கரண்டி, கார்ன் மாவு - 2தேக்கரண்டி, எலுமிச்சம் பழத்தோல் - அரை தேக்கரண்டி. செய்முறை-ஆப்பிள் பழங்களின் தோலைச் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகள், எலுமிச்சம் பழத்தோல்; லவங்கப்பட்டை ஆகியவற்றுடன் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும். மிதமான தீயில் 15 நிமிடம் வேக வைக்கவும். எலுமிச்சம் பழத்தோலையும்,லவங்கப்பட்டையையும் நீக்கி விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.கார்ன் மாவை அரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சர்க்கரை, தேன் மற்றும் கார்ன் மாவைச் சூப்போடு சேர்க்கவும் மிதமான தீயில் 5 நிமிடங்கள் கூட வைக்கவும். ஃப்ரிஜ்ஜில் வைத்து ஜில்லென்று கீரிமுடன் பரிமாறவும்.
தேவையான பொருட்கள்-முட்டைக்கோஸ் - 250 கிராம்,தண்ணீர் - 1லிட்டர்சர்க்கரை - 2மேசைக்கரண்டிவெண்ணெய் - 20கிராம்பால் - 100 மி.லிஎலுமிச்சம் பழச்சாறு - 1தேக்கரண்டிமிளகுத்தூள், உப்பு - தேவைக்கேற்பஉருளைக்கிழங்கு -3புளித்த கீரிம் - அரை கோப்பைசெய்முறை:-முட்டைக்கோஸை நன்றாகக் கழுவிபொடியாக நறுக்கிக் கொள்ளவும், உருளைக்கிழங்கின் தோலைச்சீவி. அதையும் நறுக்கிக் கொள்ளவும். இக்காய்கறிகளை தண்ணீரில் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். வெந்த காய்கறிகளை சூப் வடிகட்டியின் மூலம் வடிகட்டவும். அல்லது மிக்ஸியில் அரைக்கவும். அதோடு பால், உப்பு, மிளகுத்தூள்.வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து 10 நிமிடம் வைக வைத்து இறக்கிக் கொள்ளவும்.பறிமாறும் முன் எலுமிச்சம் பழச்சாறுகளையும் ,புளித்த கிரீமையும் சேர்க்கவும்.
கேழ்வரகு என்று அழைக்கப்படும் ராகி உடலுக்கு பல அற்புத நன்மைகளை அள்ளித்தரும் ஒரு முக்கிய தானியமாகும். இவற்றில் உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக இருக்கிறது.தேவையான பொருட்கள்:ராகி மாவு - 10 ஸ்பூன்தண்ணீர் - 1 லிட்டர்உப்பு - தேவைக்கேற்பகூடுதல் சுவைக்கு:தயிர் - 4 டீஸ்பூன்வெங்காயம் - 1 டீஸ்பூன்பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்செய்முறை-முதலில் ஒரு பாத்திரம் எடுத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.கேப்பை மாவை எடுத்து அதில்1/2cup தண்ணீர் சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.கொதித்து வரும் தண்ணீரில் அவற்றை சேர்த்து கரண்டி கொண்டு கிளற ஆரம்பிக்கவும்.நாம் சேர்த்த மாவு பால் போன்று பொங்கி வரும். இந்த நேரத்தில் அதிக சூட்டில் வைத்து கரண்டியால் கிளறிக்கொண்டே இருக்கவும்.மாவு நன்கு கொதித்து வரும் நேரத்தில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளவும்.10 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்த பிறகு, கேப்பை மாவு நல்ல வாசனை வரும். அப்போது நாம் அடுப்பை அனைத்து கொள்ளலாம்.தயாரான கேழ்வரகு கூழை நாம் அப்படியே ஆற வைத்து பருகலாம்.அவற்றுக்கு கூடுதல் சுவை கொடுக்க நாம் சில பொருட்களை சேர்த்துக்கொள்ளலாம்.கூடுதல் சுவைக்கு என நாம் எடுத்து வைத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும். அவற்றை சேர்க்கும்போது நன்றாக கிளறிக்கொள்ளவும்இதை முதல் நாள் இரவு தயாரித்து ,மறுநாள் உபயோகிக்கவும். இத்துடன் வேக வைத்த சாதம்1 கைப்பிடி, அல்லது வேகவைத்த கோதுமை குருணை சிறிதளவு, சேர்த்து மோர் ஊற்றி குடிக்கலாம். சத்தான மற்றும் சுவையான கேழ்வரகு கூழ் தயார்
தேவையான பொருட்கள்: - கற்றாழை இலை - 1தண்ணீர் - 1 கப்சர்க்கரை - தேவையான அளவுலெமன் ஜூஸ் - 1-2 டீஸ்பூன்செய்முறை-கற்றாழை மடலின் செடியில் இருந்து பறித்த பிறகு, சிறிது நேரம் வைத்தால் அதிலிருந்து மஞ்சள் நிறதிரவம் வெளியேறும். இதை தவறாமல் செய்யவும்.கற்றாழை இலையின் ஓரங்களை வெட்டி, நடுவே உள்ள கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளவும். இதை செய்வதற்கு ஸ்பூனை பயன்படுத்தலாம்.கற்றாழை ஜெல்லை ஒரு மிக்சர் ஜாரில் சேர்க்கவும். இதனுடன் ஒரு கப் தண்ணீர், சர்க்கரை மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.லெமன் ஜூஸ் சேர்ப்பதை தவிர்க்க வேண்டாம்.இப்போது தயாராக உள்ள கற்றாழை ஜூஸை ஃபிரஷ்ஷாக குடித்து மகிழுங்கள்.கற்றாழையில் உடலுக்குத் தேவையான முக்கியமான எட்டு அமினோ அமிலங்களான கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன.கற்றாழை ஜெல், கல் உப்பு, மோர் அல்லது தயிர் சேர்த்து, ஜூஸôகக் குடிப்பது பெண்களுக்கு நல்லது. இனப்பெருக்க மண்டலங்கள் ஒழுங்காக வளர, கற்றாழை உதவும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதே சமயம் தினமும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருட்கள்: -அரைப்பதற்கு...சுரைக்காய் - 300 கிராம்,இஞ்சி -3 துண்டு,பூண்டு - 7-8,பச்சை மிளகாய் – 5,சீரகம் - 1 டீஸ்பூன்சப்பாத்திக்கு...கொத்தமல்லி – கையளவு,மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,உப்பு - சுவைக்கேற்பகோதுமை மாவு - 2 கப், எண்ணெய் - தேவையான அளவு செய்முறை:-முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்சர் ஜாரில் சுரைக்காய், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த சுரைக்காய் விழுதை சேர்த்து, அத்துடன் கொத்தமல்லி, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, கோதுமை மாவு சேர்த்து, நீர் சேர்க்காமல் அப்படியே பிசைய வேண்டும்.சப்பாத்தி மாவை பிசைந்த பின், மாவு காய்ந்து போகாமல் இருக்க சிறிது எண்ணெய் தடவி மூடி வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த சப்பாத்தி மாவை சிறிது எடுத்து உருட்டி, மெல்லிய சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு, எண்ணெய் தடவி முன்னும் பின்னும் அவ்வப்போது திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து சப்பாத்தி மாவையும் சப்பாத்திகளாக சுட்டு எடுத்தால், சுவையான சுரைக்காய் சப்பாத்தி தயார். சுரைக்காய் சப்பாத்தி சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக இந்த சப்பாத்தியை கோடைக்காலத்தில் அடிக்கடி செய்து சாப்பிட்டால், உடல் சூடு குறையும். இந்த சப்பாத்திக்கு தேங்காய் சட்னி சுவையாக இருக்கும்.