வீகன் பேரிட்சை மற்றும் தேங்காய் பால் ஐஸ்க்ரீம்
தேவையான பொருள்கள்
முழு கொழுப்பு தேங்காய் பால் - 1 கேன்
பேரிட்சை - 6 முதல் 8 வரை
வெண்ணிலா - 1 டிஸ்பூன்
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
இந்த ஐஸ்க்ரீம் செய்வதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் தேங்காய் பாலை ப்ரிடீஜில் குளிர்ச்சியடைய செய்ய வேண்டும். பிளெண்டரில் வைத்து திடமான தேங்காய் பாலில் இருந்து க்ரீமை மட்டும் வெளியே எடுக்கவும்.
பேரிட்சை, வெண்ணிலா, உப்பு ஆகியவற்றையும் பிளெண்டரில் சேர்த்து க்ரீம் போன்று அரைக்கவும்.
பின்னர் இந்த கலவையை ஐஸ்க்ரீம் மேக்கருக்கு மாற்றி அதை ப்ரீசரில் சில மணி நேரங்கள் குளிர்ச்சி அடைய செய்ய வேண்டும். அவ்வளவுதான் பின்னர் எடுத்து பரிமாறலாம்
0
Leave a Reply