25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >>


ஜவ்வரிசிஉருண்டை  SWEET
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜவ்வரிசிஉருண்டை SWEET

. தேவையான பொருட்கள்:  ஜவ்வரிசி - 200 கிராம் ,சுடுநீர் - தேவையான அளவு , உப்பு - 1/4 டீஸ்பூன்,உள்ளே வைப்பதற்கு...  தேங்காய் - 1/4 மூடி ,ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன் * சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை பாகுவிற்கு... * சர்க்கரை - 200 கிராம் * தண்ணீர் - தேவையான அளவு * ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன் செய்முறை: * முதலில் ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியை போட்டு, சுடுநீர் சேர்த்து கரண்டியால் கிளறி, அத்துடன் சிறிது உப்பு தூவி நன்கு கிளறி, 2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். * பின்னர் தேங்காயை எடுத்து துருவிக் கொள்ள வேண்டும்.

செய்முறை -
துருவிய தேங்காயை கிண்ணத்தில் எடுத்து, அத்துடன் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.  2 மணிநேரம் ஆன பின், ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை கையால் லேசாக பிசைந்து, பின் சிறிது ஜவ்வரியை எடுத்து அதை தட்டையாக தட்டி, அதன் நடுவே சிறிது தேங்காய் கலவையை வைத்து மூடி உருண்டையாக பிடித்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் ஒரு 6-7 ஜவ்வரிசி உருண்டைகளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். உருண்டை பிடிக்கும் போது அதிகமாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் கல் போன்று இருக்கும்.பின்பு இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி இந்த உருண்டைகளை உள்ளே வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். * அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் சர்க்கரை மற்றும் பாகுவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து, சர்க்கரையை கரைத்துக் கொள்ள வேண்டும். * ஜவ்வரிசி வெந்ததும், அந்த உருண்டைகளை எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு, 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இந்த ஜவ்வரிசி உருண்டையை பரிமாறும் போது, மேலே சிறிது சர்க்கரை பாகுவை ஊற்றி பரிமாறுங்கள். இப்போது ஜவ்வரிசி உருண்டை தயார்.

மாலை வேளையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்கு சத்தான, அதே சமயம் அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ஒரு ஸ்நாக்ஸ். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News