எலுமிச்சை இலை இட்லி பொடி
. தேவையான பொருள்கள்:
எலுமிச்சை இலை - ஒரு கப்
கடலைப் பருப்பு - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 15
பெருங்காய் துண்டு - 3
பூண்டு - 8 பல்
மல்லி - ஒரு தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை: வாணலியில் எண்ணெய் எதுவும் சேர்க்காமல் எலுமிச்சை இலையை வறுக்கவும். அடுத்து கடலைப் பருப்பு, மிளகாய், பெருங்காயம், மல்லி, சீரகம், மிளகு அனைத்தையும் தனித்தனியே வறுத்துகொள்ளவும்.மிக்ஸியில் முதலில் மிளகாய், எலுமிச்சை இலையை சேர்த்து நன்றாக பொடித்த பின் கடலைப் பருப்பு, மல்லியை சேர்த்து அரைக்கவும் கடைசியாக, மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.கமகமக்கும் வாசனையுடன் மிகவும் சுவையாக இருக்கும் இப்பொடியை இட்லி, தோசைக்கு தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். சாதத்துடன் கலந்து பிசைந்தும் சாப்பிடலாம்.
0
Leave a Reply