கொய்யாப் பாலேடு
முதிர்ந்த கனிந்த கொய்யாக் கனியைக் கழுவித் துண்டுகளாக வெட்டி, அதற்கு சரிசமமான நிறைக்குத் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். கனி மெதுவானநிலையை அடைந்தவுடன் மெல்லிய துணியில் வடிகட்டி விதைகளை நீக்க வேண்டும். கொய்யாப் பாலேடு செய்யப் பொதுவாக தேவையான கலவை கொய்யாச்சாறு அரைக்கிலோ, சீனி முக்கால் கிலோ, வெண்ணெய்60 கிராம், சிட்ரிக் அமிலம் ஒரு கிராம், உப்பு அரை தேக்கரண்டி, சிவப்புச் சாயம்,சாயத்தைத் தவிர்த்து மீதியுள்ளவற்றை நன்கு கலந்து கட்டியாக மாறும் வரை சூடாக்க வேண்டும். பின்பு சாயத்தைச் சிறிது தண்ணீரில் கலந்து அதனுடன் சேர்க்க வேண்டும்.பீங்கான் தட்டைக் கழுவி அதன் மேல் இப்படித் தயாரித்த கொய்யா பாலேட்டைப் பரப்பிக் குளிர வைத்துத் துண்டு துண்டாக வெட்டி உண்டால் சுவையாக இருக்கும்.
0
Leave a Reply