பூந்தி தயிர் பச்சடி
தேவையான பொருட்கள் -
புளிக்காத தயிர் - ஒரு கப்,
காரபூந்தி - அரை கப்,
வேர்க்கடலை (வறுத்தது) ஒரு டேபிள்ஸ்பூன்,
முந்திரிப்பருப்பு (வறுத்தது) -6,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன்.
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் -2 டீஸ்பூன்.
செய்முறை -
தயிரை உப்பு சேர்த்து கடைந்து கொள்ளுங்கள். எண்ணெயில் கடுகு, பெருங்காயம் தாளித்து, தயிருடன் சேருங்கள். பரிமாறும்பொழுது பூந்தி, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து பரிமாறுங்கள். விசேஷங்களில் பந்தியில் முதலிடம் பெறுவது இந்த பச்சடிதான்.
0
Leave a Reply