25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் உரிய  ஆவணங்களுடன் இணைய வழி வாயிலாக 19.10.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய வழி வாயிலாக 19.10.2024-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வருகின்ற 31.10.2024 அன்று கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில், இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் சட்ட விதிகள்-2008 இன் படி, தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்கள் விதி எண் 84-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் படி, விண்ணப்பங்களை மாவட்டத்திலுள்ள, அனைத்து அரசு பொது இ-சேவை மையம் மூலம், இணைய வழி வாயிலாக(Online applications) (https://www.tnesevai.tn.gov.in) என்ற முகவரியில் வரும் 19.10.2024-ஆம் தேதிக்குள்,  கீழ்காணும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

1. விண்ணப்ப படிவம்.
2. கட்டிட வரைபடங்கள் (Site & Approved Construction plan )(A4 size)
3. நிலத்தின் உரிமைக்கான ஆவணம் ( பட்டா அல்லது பத்திர நகல்)
4. வாடகை ஒப்பந்தப் பத்திரம்  - அசல்
5. உரிமக் கட்டணம் அரசுக் கணக்கில் செலுத்திய செலுத்துச் சீட்டு .
6. அடையாள அட்டை (பான்கார்டு, ஆதார் கார்டு, குடும்ப அட்டை )
7. ஊராட்சி / நகராட்சியில் வரி செலுத்திய ஆவணங்கள்.  
8. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2.

இந்திய வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் சட்ட விதிகள் 2008 இன் கீழ் உள்ள விதிமுறைகளின்படி, விண்ணப்பங்கள் பரீசீலனை செய்யப்பட்டு, தகுதியான மனுதாரர்களுக்கு 30 நாட்கள்  மட்டும் செல்லத்தக்க தற்காலிக பட்டாசு கடை உரிமம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News